அழகென்ற சொல்லுக்கு அமுதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அழகென்ற சொல்லுக்கு அமுதா
இயக்கம்நாகராஜன்
தயாரிப்புரஃபேல் சல்தானா
கதைநாகராஜன்
இசைரஜின் மகாதேவ்
நடிப்பு
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்ரால்ப் புரொடக்ஷன்ஸ்
வெளியீடுதிசம்பர் 2, 2016 (2016-12-02)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகென்ற சொல்லுக்கு அமுதா என்பது 2016 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தினை நாகராஜன் இயக்கினார். இத்திரைப்படத்தில் ரெஜன் மற்றும் ஆஷ்ரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். .

நடிகர்கள்

இப்படத்தை சுசீந்திரனின் உதவியாளர் ரெஜன் இயக்கியுள்ளார். [2] இப்படம் சென்னை, என்னூர், பெரம்பூர், தாண்டியார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய படங்களில் படமாக்கப்பட்டது.

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு ரஜின் மகாதேவ் இசை அமைத்திருந்தார். [3]

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "நான் காயலங்கட"  கானா பாலா 4:27
2. "உசர அடிச்சி"  ஜிதின், பிரியங்கா 4:26
3. "வைசர்பாடி"  தஞ்சை செல்வி 4:21
4. "என் தேவதையோட"  பிரியங்கா பி.ஜகதீஷ் 5:27
5. "நான் காயலங்கடே"  ரஜின் மகாதேவ் 4:27
மொத்த நீளம்:
23:08

வெளியீடு மற்றும் வரவேற்பு

2 டிசம்பர் 2016 அன்று வெளியான இப்படம், அப்போதைய தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் மரணத்தால் மூன்று நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. [4] டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றை என மதிப்பிட்டது. "இந்த படம், துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பார்த்த பல மோசமான கிளிச்ச்களின் ஒரு தொகுப்பு" என்று கூறியது. [5] இந்து தமிழ் திசை ஒளிப்பதிவையும் இசையையும் பாராட்டினர். [6] மாலை மலர் படத்திற்கு நூற்றுக்கு எண்பது மதிப்பீட்டைக் கொடுத்து ஒளிப்பதிவு மற்றும் பாடல்களைப் பாராட்டினார். [7] சமயம் தமிழ் படத்தில் ஐந்தில் மூன்று பாடல்களைப் புகழ்ந்து திரைக்கதையை விமர்சித்தது. [8]

ஆதாரங்கள்

  1. "Azhagendra Sollukku Amudha Movie Review {1/5}: Mother of all stalking-as-romance films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  2. "சுசீந்திரனின் உதவியாளர் இயக்கும் அழகென்ற சொல்லுக்கு அமுதா!" [Suseenthiran's assistant directing Azhagendra Sollukku Amudha]. தினமலர். 24 July 2015. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  3. "Azhahendra Sollukku Amudha". JioSaavn. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  4. ""தடையிருக்கும் நேரத்தில் ரிலீஸ் ஆகும் 'அழகென்ற சொல்லுக்கு அமுதா'..!". Asianet News. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  5. "Azhagendra Sollukku Amudha Movie Review {1/5}: Mother of all stalking-as-romance films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020."Azhagendra Sollukku Amudha Movie Review {1/5}: Mother of all stalking-as-romance films". The Times of India. Retrieved 30 October 2020.
  6. "திரை விமர்சனம்: அழகென்ற சொல்லுக்கு அமுதா". இந்து தமிழ் (நாளிதழ்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  7. "அழகென்ற சொல்லுக்கு அமுதா". மாலை மலர். 2 December 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  8. "அழகென்ற சொல்லுக்கு அமுதா - திரைவிமர்சனம்" [Azhahendra Sollukku Amudha Tamil Movie Review]. Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.