என்னோடு விளையாடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்னோடு விளையாடு
இயக்கம்அருண் கிருஷ்ணசாமி
தயாரிப்புஸ்ரீதர் கிருஷ்ணசாமி
நரேந்திரன் கந்தசாமி
ரிஜி கே. சிவமங்கலம்
கதைArun Krishnaswami
இசைஏ. மோசஸ்
சுதர்சன் எம். குமார்
நடிப்புபரத்
கதிர்
சந்திணி தமிழரசன்
சஞ்சித ஷெட்டி
ஒளிப்பதிவுயுவா
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்ரொறொல்ஸ் ரீல்ஸ் & ரையன் ஸ்டுடியோஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 2017 (2017-02-17)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்னோடு விளையாடு (Ennodu Vilayadu) என்பது 2017 ஆண்டு வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். படத்தை அருண் கிருஷ்ணசாமி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பரத், கதிர், சஞ்சித ஷெட்டி மற்றும் சந்திணி தமிழரசன் ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் ராதாரவி மற்றும் யோகி ஜபீ ஆகியோர் துணை பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர்களாக மோசஸ் மற்றும் சுதர்சன் எம். குமார் என்பவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். என்னோடு விளையாடு படமானது 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று வெளியானது.

நடிகர்கள்

  • பரத் - விக்ரம் 
  • கதிர் - ஸ்ரீதர் 
  • சந்திணி தமிழரசன் - மின்னி
  • சஞ்சித ஷெட்டி - இன்பா 
  • ராதாரவி - நகுலன் 
  • யோக் ஜேப்பி - ஷர்மா 
  • கடம் கிஷான்
  •  ஆத்மா பேட்ரிக் - தேஜா

கதை

ஒரு கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராக இருக்கும் விக்ரமுக்கு (பரத்) குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவர். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதைக் கணிப்பதில் வல்லவர். இதனால் கடன் வாங்கியும், நிறுவனத்தின் பணத்தை எடுத்தும் குதிரைப் பந்தையத்தில் விளையாடி, லட்சக்கணக்கான பணத்தை பந்தையத்தில் இழந்திடுகிறார். இதற்கான காரணத்தை ஆராயும்போது, குதிரை பந்தயத்தில் தகிடுதங்கள் நடப்பதை கண்டுபிடிக்கிறார். அதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பந்தையம் ஒன்றில் சில கோடிகள் வெல்ல நினைக்கிறார். இதற்காக பரத்துக்கு பல இலட்சங்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் விக்ரமின் நண்பன் ஸ்ரீதர் (கதிர்) வேலைக்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு வருகிறார், கதிருக்கு சூழ்நிலையால் இன்பாவுடன் (சஞ்சிதா ஷெட்டி) ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்பாவின் தந்தை, வீட்டின் பேரில் வாங்கிய கடனால், வீடு ஏலத்துக்குப் போகும் நிலை உண்டாகிறது, இதனால் அந்த வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று நினைக்கிறார். இதை அறியும் ஸ்ரீதர் அவளுக்காக அந்த பணத்தை தயார் செய்து அந்த வீட்டை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த நகுலன் (ராதாரவி), ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் மீண்டும் முதலிடத்தைப் பிடிப்பதற்காக போட்டியில் கலந்துகொள்ள வருகிறார். அதற்காக தொடர்ந்து வென்று கொண்டிருக்கும் ஷர்மாவிடம் (யோக் ஜேப்பி) பேரம் பேசுகிறார் பேரப் பணமான 50 இலட்டசத்தை கதிருக்கே தெரியாமல் அவரது காரில் வைத்து விடுகின்றனர். இதை அறிந்துகொள்ளும் பரத் அந்தப் பணத்தைக் கொண்டு குதிரைப்பந்தையத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து, தன் கடனை அடைக்க திட்டமிடுகிறார்.

விக்ரம், ஸ்ரீதர், நகுலன் ஆகிய மூவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தயாரிப்பு

இந்தத் திரைப்பட திட்டமானது 2015 ஆம் ஆண்டு துவக்கத்தில் தொடங்கப்பட்டது. பரத், கதிர், சந்திணி, தமிழரசன் மற்றும் சஞ்சித ஷெட்டி ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசுவாமி இயக்குவதாக முடிவானது.  கிண்டி குதிரைப்பந்தய மைதானத்துக்கு வந்து சென்றபோது தனது  முதல் படத்திற்கான கள யோசனை வந்ததாக அருண் கூறினார். பின்னர் அவர் இந்த விளையாட்டின் நடைமுறை, குதிரை பந்தய விவரங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ளத் தொடங்கி, கதையை உருவாக்கினார்.[1]  2015 ஏப்ரலில் படத் தயாரிப்புப் பணிகள் புதுச்சேரியில் துவங்கின. முதல்கட்டப் படப்பிடிப்பில், சஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.[2][3] அதன் பிறகு சென்னை மற்றும் மைசூர் நகரங்களில்  கதிர் மற்றும் பரத் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் இடம்பெற்ற குதிரைப் பந்தய காட்சிகள் பெரும்பாலும் மைசூர் நகரத்தில் படமாக்கப்பட்டன.[4]  2015 செப்டம்பரில் பாரத் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டன.[5] பெங்களூரில் மேலும் சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்டப் பிறகு,  2015 நவம்பரில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் தொடங்கின.  2016 செப்டம்பரில் முதல் வெளியீட்டுத் தேதி தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப்படம் வெளியீட்டுக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக காத்திருக்கவேண்டி ஆனது.[6][7]

பின்னணி இசை

இந்தப் படத்தில் இசையமைப்பாளர்களாக சுதர்சண் எம். குமார் மற்றும் ஏ. மோசஸ் ஆகிய இருவர் தமிழ் திரைப்பட துறைக்கு புதிய இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். படத்தின் இசை 2016 நவம்பர் 9 இல் வெளியிடப்பட்டது.[8]

வெளியீடு

2017 ஜனவரி பிற்பகுதியில், படக்குழு பட வெளியீட்டு நாளாக 2017 பெப்ரவரி 24 ஐ இறுதி செய்து, படத்திற்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டது,  ராகவா லாரன்சின் மொட்ட சிவா கெட்டா சிவா (2017) படம் பெப்ரவரி 17 முதல் 24 வரை வெளியிட திட்டமிட்டிப்பதைக் கருத்தில் கொண்டு, என்னோடு விளையாடு படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்தார்.[9][10]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=என்னோடு_விளையாடு&oldid=31443" இருந்து மீள்விக்கப்பட்டது