அற்புதத்திருவந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.[1] இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப் பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது. [1]

நூல் அமைப்பு

அற்புதத் திருவந்தாதி அந்தாதி முறையில் பாடல்பெற்றது.[1] இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு.[1]இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. [1]

பாடல்கள்

இவ்வந்தாதி சைவ நெறியைப் பற்றியும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைப் பற்றியும் கூறுகின்றது.[1] சிவபெருமானின் திருஉருவச் சிறப்பும், திருவருட் சிறப்பும், இறைவனின் குணம் ஆகியவற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது.[1]

இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.


அற்புதத்திருவந்தாதியில் ஒரு பாடல்:


உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொற் - பருவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச்சென்(று) ஏத்துவார்
பேராத காதல் பிறந்து.

நூல் சிறப்பு

இந்நூல் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும்.[1] அதனால் இதனை ஆதி அந்தாதி என்றும் அழைப்பர். [1]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=அற்புதத்திருவந்தாதி&oldid=14244" இருந்து மீள்விக்கப்பட்டது