அஞ்சு (Anju) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள, தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் பேபி அஞ்சு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு வந்தார்.[1] இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இப்போது தொலைப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தனது இரண்டு வயதில் 1979 ஆம் ஆண்டில் உதிரிப்பூக்கள் என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துவந்தார். 1988 ஆம் ஆண்டில் ருக்மிணி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றார்.

அஞ்சு
பிறப்புஇந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979–2013
2016–2018
2020-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
டைகர் பிரபாகர்
(m.1995-1996) (மணமுறிவு)
பிள்ளைகள்அர்ஜுன் பிரபாகர் (பி. 1996)

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஒரு முஸ்லீம் தந்தைக்கும், இந்து தாய்க்கும் தமிழ்நாட்டில் பிறந்தார். கன்னட நடிகர் டைகர் பிரபாகரை 1995 இல் திருமணம் செய்து கொண்டார், 1996 இல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 1996 இல் மகன் அர்ஜுன் பிறந்தார்.[2]

விருதுகள்

  • 1988 ருக்மிணி படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது

திரைப்படவியல்

தமிழ்

ஆண்டு பெயர் பாத்திரம் குறிப்புகள்
1979 உதிரிப்பூக்கள் பவாணி குழந்தை நட்சத்திரம்
1980 பூட்டாத பூட்டுகள் குழந்தை நட்சத்திரம்
1980 பொல்லாதவன் குழந்தை நட்சத்திரம்
1981 சின்னமுள் பெரியமுள் டோலி குழந்தை நட்சத்திரம்
மீண்டும் கோகிலா சுப்பிரமணியம், கோகிலாவின் மகள் குழந்தை நட்சத்திரம்
கர்ஜனை ஆசா குழந்தை நட்சத்திரம்
பால நாகம்மா குழந்தை நட்சத்திரம்
1982 இட்லர் உமாநாத் குழந்தை நட்சத்திரம்
டார்லிங், டார்லிங், டார்லிங் குழந்தை நட்சத்திரம்
பொய் சாட்சி குழந்தை நட்சத்திரம்
வடிவங்கள் வினி குழந்தை நட்சத்திரம்
அழகிய கண்ணே குழந்தை நட்சத்திரம்
பூம்பூம் மாடு குழந்தை நட்சத்திரம்
1983 வில்லியனூர் மாதா லலிதா குழந்தை நட்சத்திரம்
1984 நீ தொடும்போது குழந்தை நட்சத்திரம்
1984 அன்புள்ள மலரே குழந்தை நட்சத்திரம்
1985 என் செல்வம் குழந்தை நட்சத்திரம்
ஊஞ்சலாடும் உறவுகள் குழந்தை நட்சத்திரம்
1986 ஆயிரம் பூக்கள் மலரட்டும் குழந்தை நட்சத்திரம்
1989 முந்தானை சபதம் குழந்தை நட்சத்திரம்
1990 கேளடி கண்மணி அனு
எங்கள் சாமி ஐயப்பன் லட்சுமி
அரங்கேற்ற வேளை தொழிலதிபரின் மகள்
1991 அதிகாரி அனு
நான் போகும் பாதை லட்சுமி
என் பொட்டுக்கு சொந்தக்காரன்
1992 அக்னி பார்வை சாந்தி
அபிராமி இராஜேஸ்வரி
1993 ஆதித்யன் தெய்வானை
பிரதாப் பிரியா
புருஷ லட்சணம் அஞ்சு
கட்டளை அஞ்சு
1995 இளவரசி இளவரசி
1996 கோபாலா கோபாலா பாத்திமா
1999 என்றென்றும் காதல் கிருஷ்ணனின் மனைவி
பூமகள் ஊர்வலம் சரவணனின் தாய்
உனக்காக எல்லாம் உனக்காக சாவித்திரி
2000 குபேரன் தங்கம்
ஜேம்ஸ் பாண்டு
2003 பாப் கார்ன் வள்ளி
உன்னைச் சரணடைந்தேன் தேஜாவின் தாய்
மிலிட்டரி வேலு நாயக்கரின் மனைவி
2007 வீராப்பு கொடி
பொல்லாதவன் செல்வத்தின் மனைவி
2009 இந்திர விழா இந்திரா
2010 நீயும் நானும் சுனிதா
2011 மின்சாரம் அமைச்சர்
2013 மதயானைக் கூட்டம் தீபா

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு சேனல் பங்கு மொழி குறிப்புகள்
1999-2001 சித்தி சன் டிவி வைதேகி தமிழ் தொலைக்காட்சி அறிமுகம்
2000-2001 கிருஷ்ணதாசி விரிவுரையாளர் கல்யாணி
2001 சூலம்
2002-2003 அகல் விலக்குகல்
காயத்ரி பிரியா ஜெமினி டி.வி. தெலுங்கு
2004 மனசி டி.டி மலையாளம் மலையாளம்
கடமட்டத்து கதனார் ஆசியநெட் எட்டுகெட்டில் பானுமதி
2005-2006 செல்வி சன் டிவி முரட்டு பாண்டியனின் மனைவி தமிழ்
2007 அராசி சன் டிவி முரட்டு பாண்டியனின் மனைவி
2009 தேவி மகாத்யம் ஆசியநெட் பங்கஜாக்ஷி மலையாளம்
2016–2018 சத்யம் சிவம் சுந்தரம் அமிர்தா டி.வி. பைரவி
2020 - தற்போது வரை மகரசி சன் டிவி சாமுண்டேஸ்வரி தமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஞ்சு&oldid=22280" இருந்து மீள்விக்கப்பட்டது