இந்திர விழா (திரைப்படம்)
இந்திர விழா | |
---|---|
இயக்கம் | கே. இராஜேஸ்வர் |
தயாரிப்பு | அசோக் கே. கோட்வானி |
கதை | கே. இராஜேஸ்வர்ர் |
இசை | யதிஷ் மகாதேவ் |
நடிப்பு | Srikanth நமிதா கபூர் (நடிகை) சுருதி மராத்தே நாசர் விவேக் |
ஒளிப்பதிவு | ஜெய் காமில் அலெக்ஸ் |
படத்தொகுப்பு | ரகுபொப் |
விநியோகம் | எஎன்கேகே மூவிஸ் |
வெளியீடு | 10 சூலை 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்திர விழா (Indira Vizha) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரில்லர் திரைப்படமாகும். கே. இராஜேஸ்வர் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த், நமீதா, சுருதி மராத்தே ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க நாசர், விவேக், ரகசியா, ராதாரவி, ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை அறிமுக இசையமைப்பாளர் யதிஷ் மகாதேவ் அமைத்துள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது 11 பிப்ரவரி 2008 இல் தொடங்கியது [1] படம் 10 ஜூலை 2009 அன்று வெளியானது.
படத்தின் கதையானது பாலியல் துன்புறுத்தலைச் சுற்றியதாக உள்ளது. இது ஹாலிவுட் திரைப்படமான டிஸ்க்ளோஷரை அடிப்படையாகக் கொண்ட ஐத்ராஸ் என்ற இந்தி திரைப்படத்தை தழுவி எடுக்கபட்டது.
கதை
படம் காமினியின் (நமிதா) கதையைச் சொல்கிறது, பணக்காரரான ஜான் குமாரமங்கலம் அல்லது ஜே.கே (நாசர்) என்பவரின் இளம் மனைவி காமினி. ஜே.கே. ஒரு தொலைகாட்சியைத் துவக்கி அதை தன் மனைவியின் பொறுப்பில் ஒப்படைக்கிறார். அந்த்த் தொலைக் காட்சியில் தன் முன்னாள் காதலரான சந்தோஷ் சீனிவாசனை (ஸ்ரீகாந்த்) உயர் பொறுப்பில் வேலைக்கு சேர்த்து மீண்டும் அவனை தன் வாழ்க்கையில் கொண்டு வர திட்டமிட்டுகிறாள். சீனிவாசன் சாவித்ரி துரைசிமாலு (ஸ்ருதி மராத்தே) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளான். தொலைக்காட்சியில் உயர் வேலை கிடைத்த சீனிவாசன் அங்கு வந்த பிறகே தன் முதலாளி தன் முன்னாள் காதலி என அறிகிறான். காமினியின் காமத் தூண்டலில் முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து அதில் இருந்து தப்பிச் செல்கிறான். இதில் ஆத்திரமடைந்த காமினி சந்தோஷ் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை வைக்கிறாள். இதை சட்டரீதியாக சீனிவாசன் எதிர்கொள்கிறான். இதிலிருந்து சீனிவாசன் மீண்டானா இல்லையா என்பதே கதை
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
ஸ்ரீகாந்த் | சந்தோஷ் சீனிவாசன் |
நமிதா | காமினி |
சுருதி மராத்தே | சாவித்திரி துரைசிமாலு |
நாசர் | ஜான் குமாரமங்கலம் (ஜே.கே) |
விவேக் | ஓப்பிலா மணி |
ரகசியா | ஸ்டெல்லா |
ராதாரவி | நீதிபதி சட்டநாதன் |
ஒய். ஜி. மகேந்திரன் | வழக்கறிஞர் |
மனோபாலா | |
நிழல்கள் ரவி |
தயாரிப்பு
படத்தில் நடிக்க நடிகர் ரகுவரன் ஒப்பந்தமிட்டு படப்பிடிப்புக்கு முந்தைய ஒளிப்படப்பதிவுகளை முடித்தார். திரைப்படத்தின் தயாரிப்பின் போது அவர் இறந்த காரணத்தினால், அவருக்கு பதிலாக நாசர் அவரின் பாத்திரத்தில் நடித்தார்.[2]
இசை
படத்திற்கான இசையானது அறிமுக இசையமைப்பாளர் யதிஷ் மகாதேவால் அமைக்கபட்டது. பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார்.[3]
- "மோகமா" - ஹரிஹரன், சுஜாதா
- "ஒரு கிண்ணத்தை" - எம். கே. பாலாஜி, பிரியதர்ஷினி
- "காஷ்மீர் கொண்டுவா" - யதிஷ், அனுஷ்கா மஞ்சந்தா
- "நான் ஓரு" - சயனோரா பிலிப், மேகா
குறிப்புகள்
- ↑ "Tamilnadu Entertainment :: Movie Trading Portal" இம் மூலத்தில் இருந்து 2008-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080311165002/http://www.tamilnaduentertainment.com/tamil.asp?hotclick=indravizha.txt.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-04/kanthaswamy-31-05-08.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305002217/http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?movieid=56.