ஆதித்யன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதித்யன்
இயக்கம்வி. எல். பாஸ்கரராஜ்
தயாரிப்புஜி. ஆர். எத்திராஜ்
ஆர். அச்சுதானந்தன்
ஈஸ்வரி உலகனாதன்
பி. சுஜாதா
இ. ராஜன்
சி. குமரன்
கதைவி. எல். பாஸ்கரராஜ்
இசைகங்கை அமரன்
நடிப்பு
ஒளிப்பதிவுதேவ்சந்த் ரென்
படத்தொகுப்புகணேஷ் — குமார்
கலையகம்வேலூர் திரைப்பட நிறுவனம்
வெளியீடுசனவரி 14, 1993 (1993-01-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதித்யன் (Aadhityan) வி. எல். பாஸ்கரராஜ் இயக்கத்தில் 1993இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் சரத்குமார் மற்றும் சுகன்யா (நடிகை) முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் கங்கை அமரன். சனவரி 14, 1993இல் வெளியிடப்பட்டது..[1][2]

கதைச்சுருக்கம்

ஆதித்யன் (சரத்குமார்) கிராமத்தில் கொல்லனாக இருக்கிறான். கிராமவாசிகள் அவனை முரடன் என்று கருதுகிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும் ஜமீந்தார் (கிட்டி (நடிகர்)) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி (பாண்டியராஜன்), தெலுங்குப் பெண் மங்காவிற்கு(சில்க் ஸ்மிதா) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்(டெல்லி கணேஷ்), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை சுகன்யா (நடிகை) திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் தாலி கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள்.

நடிப்பு

இசை அமைப்பு

ஆதித்யன்
பாடல்கள்
வெளியீடு1993
ஒலிப்பதிவு1992
நீளம்19:54
இசைத் தயாரிப்பாளர்கங்கை அமரன்

இப் படத்தின் பாடல்களை எழுதி இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆவார்.[3] இப் படத்தின் 5 பாடல்களும் 1993 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

எண் பாடல் பாடியவர்கள் காலம்
1 'கோங்குரா ... நேனு ஆந்திரா' மனோ, சித்ரா 4:28
2 'கண்ணா காதல்l கண்ணுக்கு' சுவர்ணலதா 3:43
3 'கட்டிக்கோ கூறை பட்டு சேலை' கே. எஸ். சித்ரா , குழு 4:30
4 'கொட்டட்டும் மேள சத்தம்' மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா 4:26
5 'உச்சி மலை' கங்கை அமரன் 2:47

வரவேற்பு

"நியூ ஸ்டெரைட்ஸ் டைம்ஸ்" பத்திரிகையின் நிருபர் கே. விஜயன், நடிகர்கள் தங்களது நடிப்பில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகவும் நன்றாக வந்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதித்யன்_(திரைப்படம்)&oldid=30545" இருந்து மீள்விக்கப்பட்டது