சேரன் பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேரன் பாண்டியன்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைகே. எஸ். ரவிக்குமார்
ஈரோடு சௌந்தர் (வசனம்)
இசைசௌந்தர்யன்
நடிப்புசரத்குமார்
ஸ்ரீஜா
விஜயகுமார்
நாகேஷ்
ஆனந்த்பாபு
மஞ்சுளா விஜயகுமார்
சித்ரா
கவுண்டமணி
செந்தில்
கே. எஸ். ரவிக்குமார்
ஒளிப்பதிவுஅசோக்ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்சூப்பர் குட் பிலிம்சு
விநியோகம்சூப்பர் குட் பிலிம்சு
வெளியீடுமே 31, 1991 (1991-05-31)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

சேரன் பாண்டியன் (Cheran Pandiyan) 1991ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், விஜயகுமார், நாகேஷ், ஆனந்த் பாபு மஞ்சுளா விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

கதைச் சுருக்கம்

கிராமத்தின் தலைவரான விஜயகுமார் (பெரிய கவுண்டர்) தனது மனைவி மஞ்சுளா, மற்றும் மகள் ஸ்ரீஜா உடன் வசித்து வருகிறார். இவர் சாதி ஏற்றத் தாழ்வுகளை கடைபிடித்து வாழ்பவர். தனது சகோதரரான சரத்குமாரை (சின்னக் கவுண்டர்) இவருக்கு பிடிக்காமல் போகிறது. காரணம் சரத்குமார், விஜயகுமாரின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு பிறந்தவர் என்பதால் விஜயகுமார் எப்பொழுதுமே சரத்குமாரை வெறுக்கிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் உறவினரான ஆனந்த்பாபு இந்தக் கிராமத்திற்கு வருகிறார். ஆனந்த்பாபுவுக்கு விஜயகுமாரின் மகளான ஸ்ரீஜாவின் மேல் காதல் வருகிறது. இதையறிந்த விஜயகுமார் ஸ்ரீஜாவுக்கு அந்த ஊரில் நாகேசின் மகனான கே. எஸ். ரவிக்குமார் உடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். விஜயகுமார் தனது தம்பியான சரத்குமார் நல்லவர் என்பதை புரிந்து கொண்டாரா, தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

மீளுருவாக்கம்

தமிழில் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் தெலுங்கில் பாலராமகிருஷ்ணலு என மீளுருவாக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்தின் பாடல்களை எழுதி இப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் ஆவார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்கள் ஒன்றாக"  மனோ, சித்ரா 5:19
2. "காதல் கடிதம்"  எஸ். ஏ. ராஜ்குமார், சுவர்ணலதா 5:00
3. "சம்பா நாத்து"  சுவர்ணலதா 4:47
4. "வா வா எந்தன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:43
5. "கொடியும்"  மலேசியா வாசுதேவன், சுனந்தா 5:05
6. "சின்னத் தங்கம்"  கே. ஜே. யேசுதாஸ் 4:33
7. "எதிர்வீட்டு"  அருண்மொழி, சித்ரா 5:22
8. "ஊருவிட்டு ஊருவந்து"  எஸ். பி. சைலஜா 5:24

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சேரன்_பாண்டியன்&oldid=33598" இருந்து மீள்விக்கப்பட்டது