தெனாலி (தமிழ்த் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தெனாலி
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புகற்பகம் கே. எஸ். ரவிக்குமார்
பி. எல். தேனப்பன்
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
வசனம்கிரேசி மோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புகமல்ஹாசன்
ஜெயராம்
ஜோதிகா
தேவயானி
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
நடனம்பி. எச். தருண்குமார்
கலையகம்ஆர். கே. செல்லுலாய்ட்ஸ்
வெளியீடு26 அக்டோபர் 2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

தெனாலி (Thenali) 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

நகைச்சுவைத் திரைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தெனாலி சோமன் ஒரு இலங்கை தமிழர், அவர் இலங்கை உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஏற்பட்ட பல பயங்களால் மனநல சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார். தெனாலிக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களான பஞ்சபூதம் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் இளைய மருத்துவர் கைலாஷ் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் பெறுவதில் பொறாமைப்படுகிறார்கள். தெனாலியை குணப்படுத்துவதில் அவர் தோல்வி அடைவார் என்று நம்பி அவர்கள் தெனாலியை அவரிடம் அனுப்புகிறார்கள். கைலாஷ் தனது மனைவி ஜலஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருடன் விடுமுறையில் கொடைக்கானலில் உள்ள தனது வீட்டிற்கு செல்கிறார். கைலாஷ் தெனாலியிடம் விடுமுறைக்கு பிறகு தனது சிகிச்சை தொடங்குவதற்கு காத்திருக்கச் சொல்கிறார், ஆனால் பஞ்சபூதம் தெனாலியை விடுமுறையிலேயே கைலாஷைச் சந்திக்கச் செல்லுமாறு கேட்கிறார்.

தெனாலி கைலாஷின் கொடைக்கானல் வீட்டை அடைகிறார். அங்கு கைலாஷின் தங்கை ஜானகி என்பவரை அவர் காதலிக்கிறார், இது அவர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. முழு படமும் தெனாலியின் செயல்களால் கைலாஷ் எப்படி வெறித்தனமாகப் போகிறான் என்பது பற்றியும், அவனது மனைவிக்கு தெனாலியுடன் ஒரு உறவு இருக்கிறதா என்று கைலாஷ் சந்தேகிக்கிறதையும் காட்டுகிறது. அவர் தெனாலியை வெடிகுண்டுடன் ஒரு மரத்தில் கட்டி தெனாலியை கொல்ல முயற்சிக்கிறார். தெனாலி, அதை அவரது அச்சத்திலிருந்து விடுபட மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு போலி வெடிகுண்டு என்று நினைத்து அதை அகற்றி கைலாஷின் வீட்டில் வைக்கிறார். அது அங்கு வெடிக்கிறது. இதைப் பார்த்த கைலாஷ் ஒரு பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகிறார். தெனாலி பின்னர் ஜானகியை மணக்கிறார்.

தெனாலி, கைலாஷ் மற்றும் குடும்பத்தினர் ஒரு சுற்றுலாவிற்குச் செல்லும்போது, ​​தெனாலி நீண்டகாலமாக இழந்த தன் மனைவியை அங்கு பார்த்து அவருடன் மீண்டும் இணைகிறார். அதனால் கோபமடைந்த கைலாஷ் தனது சக்கர நாற்காலியில் இருந்து ஏழுந்து, ஜானகியின் வாழ்க்கையை அழித்ததற்காக தெனாலியை துன்புறுத்துகிறார். ஆனால் அந்த அதிர்ச்சியின் மூலம் கைலாஷின் பக்கவாதத்தை குணப்படுத்த தெனாலி போட்ட நாடகம் என்பதை விரைவில் உணர்ந்தார்.

நடிகர்கள்

தயாரிப்பு

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கே. எஸ். ரவிக்குமார் பின்வருமாறு கூறியுள்ளார். "மருதநாயகம் திரைப்படம் நிறுத்தப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தனக்கு ஒரு வருடம் காலம் தற்போது உள்ளது, அதில் இரண்டு திரைப்படங்கள் நடிக்கலாம் ஒரு படத்தை நான் இயக்குகிறேன் அடுத்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா என்று வினவினார். அதற்கு சம்மதம் தெரிவிக்க கமல் ஹே ராம் திரைப்படத்தை முடித்துவிட்டு தெனாலி திரைப்படத்துக்கு ஆயத்தமானார். தெனாலி படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஆனேன்", எனக் கூறியுள்ளார்.[1][2]

இந்த படத்துக்கு தெனாலி என்ற பெயரை ரஜினிதான் பரிந்துரைத்தார், எனத் தெரிவித்துள்ள கே. எஸ். ரவிக்குமார் மேலும் இப்படம் அமேரிக்க திரைப்படமான வாட் எபௌட் பாப்? என்ற படத்தின் பாதிப்பில் உருவாக்கனேன். ஆனால் ஒரு காட்சியை கூட அப்படத்திலிருந்து நகல் எடுக்கவில்லை. ஒரு வரிக் கதைக்கு 10 திரைக்கதைகளை உருவாக்கினோம், அந்த ஆங்கில படம் வெற்றி பெறவில்லை ஆனால் தெனாலி மிகப்பெரிய வெற்றி பெற்றது, என பேட்டியளித்துள்ளார்.[1]

பாடல்கள்

தெனாலி
ஒலிப்பதிவு
வெளியீடு2000
ஒலிப்பதிவுபஞ்சதம் கலையகம்
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
நீளம்35:55
இசைத்தட்டு நிறுவனம்ஸ்டார் மியூசிக்
சரிகம
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்

ஏ. ஆர். ரகுமான் திரைப்பட பாடலுக்கு இசை அமைத்துள்ளார். புதுமுக பாடலாசிரியராக சிலர் இப்படத்தில் அறிமுகமானார்கள்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "அத்தினி சித்தினி" ஹரிஹரன், சித்ரா ஐயர், கமல்ஹாசன் அறிவுமதி 5:32
2 "சுவாசமே சுவாசமே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம் பா. விஜய் 5:42
3 "இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ" கமல்ஹாசன், கே. எஸ். சித்ரா தாமரை 6:16
4 "போர்கலம் அங்கே" ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா பிறைசூடன் 6:32
5 "ஆலங்கட்டி மழை" கமல்ஹாசன், ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன், 'பேபி' சிலோனா ராத், 'பேபி' சரண்யா ஸ்ரீநிவாஸ் கலைகுமார் 5:24
6 "தெனாலி" சங்கர் மகாதேவன், கிளிண்டன் சிரெஜோ இளையகம்பன் 6:10

வெளியீடு

தெனாலி திரைப்படம் 26 அக்டோபர் 2000, தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமையை ராஜ் டிவி பெற்றுள்ளது.

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் தெனாலி எனும் பெயரிலேயே வெளியானது. தெலுங்கில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இப்படத்தின் உரிமையை வாங்கி வெளியிட்டார்.

விருதுகள்

தமிழக அரசு திரைப்பட விருதுகள்

  • சிறந்த பாடலாசிரியர் - தாமரை
  • சிறந்த கலை இயக்குநர் - மணிராஜ்
  • சிறப்பு பரிசு - ஜெயராம்

துணுக்குகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்