கப்பலோட்டிய தமிழன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கப்பலோட்டிய தமிழன்
இயக்கம்பி. ஆர். பந்துலு
கதைம. பொ. சிவஞானம்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
ஜெமினி கணேசன்
வெளியீடுநவம்பர் 7, 1961[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கப்பலோட்டிய தமிழன் இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம்பிள்ளை பற்றிய திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. கதையை ம. பொ. சிவஞானமும், திரைக்கதையை "சித்ரா"கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ். டி. சுந்தரமும் எழுதியிருந்தனர். இது பி. ஆர். பந்துலு இயக்கித் தயாரித்த திரைப்படம்.

நடிகர் மற்றும் நடிகைகள்

விருதுகள்

  • 1962இல் 9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது[2].
  • 1961 இல் இப்படம் வெளியானபோது வரிவிலக்கு அளிக்கபட்டவில்லை. 1967 இல் மறுவெளியீட்டின்போது வரிவிலக்கு வழங்கப்பட்டது.[3][4]

பாடல்கள்

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதியவையாகும்.[5][6]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 சின்னக் குழந்தைகள் பி. சுசீலா சுப்பிரமணிய பாரதியார் 02:39
2 என்று தணியும் இந்த திருச்சி லோகநாதன் 02:18
3 காற்று வெளியிடை கண்ணம்மா பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 03:43
4 நெஞ்சில் உறுமுமின்றி சீர்காழி கோவிந்தராஜன் 02:11
5 ஓடி விளையாடு பாப்பா சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ரோகிணி 03:41
6 பாருக்குள்ளே நல்ல நாடு சீர்காழி கோவிந்தராஜன் 02:39
7 தண்ணீர் விட்டோம் திருச்சி லோகநாதன் 03:07
8 வந்தே மாதரம் என்போம் சீர்காழி கோவிந்தராஜன் 02:44
9 வெள்ளிப் பனிமலை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எல். ஆர். ஈஸ்வரி, ரோகிணி 03:42

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கப்பலோட்டிய_தமிழன்&oldid=31832" இருந்து மீள்விக்கப்பட்டது