ஒரத்தநாடு
ஒரத்தநாடு | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 10°37′N 79°16′E / 10.62°N 79.27°ECoordinates: 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | ஒரத்தநாடு |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] |
பெருந்தலைவர் | சே. திருமங்கை |
சட்டமன்றத் தொகுதி | ஒரத்தநாடு
- |
சட்டமன்ற உறுப்பினர் |
ஆர். வைத்திலிங்கம் (அதிமுக) |
மக்கள் தொகை | 10,247 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) |
விரிவாக்கு
குறியீடுகள் | |
இணையதளம் | www.townpanchayat.in/orathanadu |
ஒரத்தநாடு (English: Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, ஒரத்தநாடு வட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள கால்நடைக் கல்லூரியும் ஒன்றாகும்.
1954 முதல் இவ்வூர் தனித்தாலுச்காவாக அமைக்கப்பட்டது. இவ்வட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து பிரிக்கப் பெற்றதே. இவ்வட்டம் சிறியது. இங்கு நீர்வளம் குறைவு எனலாம். இவ்வட்டம் சிறுவட்டம் எனினும் சிறப்பாக அமையப்பெற்றது. இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), கள்ளர் என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். அம்மன் பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.[4]