ரோஜா (திரைப்படம்)
ரோஜா | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | கே. பாலச்சந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | மணிரத்னம் சுஜாதா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | அரவிந்த்சாமி மதுபாலா பங்கஜ் கபூர் நாசர் ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
விநியோகம் | கவிதாலயா பிரமிட் சாய்மிரா |
வெளியீடு | 15 ஆகஸ்ட் 1992 |
ஓட்டம் | 137 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரோஜா (Roja) திரைப்படம் 1992 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம், டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
வகை
கதைச்சுருக்கம்
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த்சாமி). ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.
நடிகர்கள்
- அரவிந்த்சாமி
- மதுபாலா
- பங்கஜ் கபூர்
- நாசர்
- ஜனகராஜ்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
ருக்குமணி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா |
சின்ன சின்ன ஆசை | மின்மினி, ஏ. ஆர். ரகுமான் |
காதல் ரோஜாவே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் |
புது வெள்ளை மழை | உண்ணிமேனன், சுஜாதா |
தமிழா தமிழா | ஹரிஹரன் மற்றும் குழுவினர் |
சின்ன சின்ன ஆசை | மின்மினி |
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
- சிறந்த இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான்
- சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
- சிறப்பு பரிசு (கூடுதல் பரிசு) - சிறந்த திரைப்படம்
தமிழக அரசு திரைப்பட விருதுகள்[2]
- சிறந்த திரைப்படம் - முதல் பரிசு
- சிறந்த இயக்குநர் - மணிரத்னம்
- சிறந்த இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான்
- சிறந்த பெண் பின்னணி பாடகர் - மின்மினி
- சிறப்பு பரிசு (கூடுதல் பரிசு) - நடிகை மதுபாலா
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் - முதல் பரிசு
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - ஏ. ஆர். ரகுமான்
மேற்கோள்கள்
- ↑ "Roja". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 15 August 1992. https://news.google.co.in/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920815&printsec=frontpage&hl=en.
- ↑ "Film city to be ready soon: Jaya". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 19 சனவரி 1994. https://news.google.com/newspapers?id=8YNlAAAAIBAJ&sjid=j54NAAAAIBAJ&pg=930%2C138001.