வீரபாண்டி (தேனி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Mullai-Periyar, Veerapandi, Theni district.jpg
வீரபாண்டி, தேனியிலுள்ள முல்லைப் பெரியாறு

வீரபாண்டி (தேனி) (Veerapandi (Theni)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், தேனி வட்டத்தில், மாரியம்மன் கோவில்பட்டி, முத்துத்தேவன்பட்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய முதல் நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் தேனி - கம்பம் செல்லும் சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,358 வீடுகளும், 16,158 மக்கள்தொகையும் கொண்டது. [1]

இது 18 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 89 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

கோயில்கள்

பள்ளிகள்

  1. அரசினர் மேல்நிலைப்பள்ளி
  2. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  3. வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  5. ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி
  6. அறிவகம் மெட்ரிகுலேசன் பள்ளி
  7. லிட்டில் கிங்டம் ஆங்கிலப் பள்ளி

Veerapandi_river

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=வீரபாண்டி_(தேனி)&oldid=118895" இருந்து மீள்விக்கப்பட்டது