மதுரை முக்தீஸ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஐராவதநல்லூர் |
மாவட்டம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முக்தீஸ்வரர் |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | தெப்பக்குளம் |
மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில், மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இறைவன்
கருவறையில் உள்ள இறைவன் முக்தீஸ்வரர் ஆவார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்மன் சன்னதி தனியாக உள்ளது.
அமைப்பு
பலி பீடம், ரிஷபக்கொட்டில், கொடி மரம் ஆகியவை கோயிலில் காணப்படுகின்றன. முன் மண்டபத்தைத் தொடர்ந்து உள் மண்டபம், கருவறை ஆகியவை காணப்படுகின்றன. கருவறைக் கோஷ்டத்தில் முறையே தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்காம்பிகை ஆகியோர் காணப்படுகின்றனர்.
ஓவியங்கள்
மதுரைத் திருவிளையாடல்கள் 64இல் இக்கோயில் அமையக் காரணமாக இருந்த ஐராவதம் சாபம் தீர்த்தது, இந்திரன் சாபம் தீர்த்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஓவியங்களாகக் காணப்படுகின்றன.
படத்தொகுப்பு
ஆதாரங்கள்
வெளியிணைப்பு
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
Muktisvarar Temple, Madurai
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
Muktisvarar Temple, Madurai
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.