முனிச்சாலை
முனிச்சாலை (Munichalai), மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியில், சுவாமி சன்னதி தெருவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. முனிச்சாலை மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தின் 50ஆவது வட்டத்தில் சிறு பகுதியையும் மற்றும் 51ஆவது வட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கொண்டுள்ளது.
முனிச்சாலை, கீழவெளி வீதியில் உள்ள வெற்றிலைப் பேட்டையிலிருந்து பிரிந்து காமராசர் சாலை மற்றும் பழைய குயவர் பாளையம் சாலை சந்திப்பில் இணைகிறது. ஓபுளா படித்துறை தரைப் பாலம் முனிச்சாலையை வைகை ஆற்றின் வடபகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைக்கிறது.
முனிச்சாலையின் அஞ்சலக சுட்டு எண் 625009 ஆகும்.[1] தொலைபேசி சுட்டு எண் 0452 ஆகும்.[2]
பெயர்க் காரணம்
முனிச்சாலையின் கிழக்குக் கோடியில், காமராசர் சாலை சந்திப்பில், புளியமரத்தடியில் முனீஸ்வரர் கோயில் கொண்டிருந்த காரணத்தால் இச்சாலைக்கு முனிச்சாலை என பெயர் வழங்கலாயிற்று.
மக்கள் வகைப்பாடு
முனிச்சாலை பகுதியில் உருது மற்றும் தமிழ் பேசும் இசுலாமியர், தெலுங்கு நாயக்கர், நாடார், செட்டியார் மற்றும் சௌராஷ்டிரர் அதிகமாகவும், பிற சமூகத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் உள்ளனர். இப்பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
தெருக்கள்
முனிச்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்த தெருக்கள்;
- கொல்லம் பட்டறைத் தெரு
- கரீம்சா பள்ளிவாசல் தெருக்கள் 1 முதல் 5 முடிய
- ஓபுளா படித்துறை தெரு
- இஸ்மாயில்புரம் தெருக்கள் 1 முதல் 19 முடிய
- அருணாசலபுரம் தெருக்கள் 1 முதல் 4 முடிய
- ஓலைப்பட்டினம் தெருக்கள் 1 முதல் 2 முடிய
முனிச்சாலையின் தெற்குப் பகுதியில் கான்பாளையம், லெட்சுமிபுரம், பூசாரித் தோப்பு மற்றும் ருக்குமணி பாளையம் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளின் தெருக்கள் முனிச்சாலையுடன் இணைகிறது.
கல்வி நிலையங்கள்
- மதுரை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி
- மதுரை மாநகராட்சி துவக்கப் பள்ளி
- விருதுநகர் இந்து நாடார் பெண்கள் மேனிலைப் பள்ளி
- ராஜா தனலட்சுமி நடுநிலைப் பள்ளி
- ஜெயா நடுநிலைப் பள்ளி
மருத்துவமனைகள்
- மதுரை மாநகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்
- நயினா இதய மருத்துவமனை
- ராஜா மருத்துவமனை
- பாண்டியராஜ் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை
- கிருத்திகா பொது மற்றும் எலும்பு மருத்துவமனை
- அருண் பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை
- பி. ஆர். (அரிவாசன்) எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை
- பாலா பல் மருத்துவமனை
- புளு மாடர்ன் மருத்துவமனை
வழிபாட்டுத் தலங்கள் - பள்ளிவாசல்கள்
- கரீம்சா பள்ளிவாசல்
- சையத் நூருத்தீன் பள்ளிவாசல்
கோயில்கள்
- முனீஸ்வரர் கோயில்
- உச்சையினி மாகாளியம்மன் கோயில்
- பவநாராயண சுவாமி கோயில்
கிராமியக் கலைஞர்கள்
கரகாட்டம், நாதஸ்வரம், மேளம், மற்றும் கிராமிய நாட்டிய-நாடகக் கலைஞர்கள் பரவலாக உள்ளனர்.
புகழ் பெற்றவர்கள்
மற்றவை
- ஓபுளா படித்துறை மண்டபம்
- கோபுளா படித்துறை மண்டபம்
- வாழைக்காய் மண்டி
- அமிர்தம் இனிப்பகம்
- களபிள்ளா தேனீர் கடை
- முஹம்மது டிரேடர்ஸ்
- அட்டைபெட்டிகடை &மரக்கடைகள்
- மாலை நேர உணவகங்கள்
- கண்ணா ஹோட்டல்
- கரூர் வைஸ்யா வங்கி, ஹெச். டி. எப். சி., வங்கி, டாட்டா இண்டி கேஷ் ஏ டி எம் கள் (ATM)
போக்குவரத்து
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, தெப்பக்குளம், விரகனூர், சிலைமான், திருப்புவனம், திருப்ப்பாச்சேத்தி, லாடனேந்தல் போன்ற மதுரையின் கிழக்குப்பகுதியில் அமைந்த ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் முனிச்சாலை வழியாக செல்கிறது. முனிச்சாலையின் மேற்கு முனையில் ஒரு பேருந்து நிறுத்தமும், கிழக்கு முனையில் ஒரு பேருந்து நிறுத்தமும் அமைந்துள்ளது.
அருகில் செல்லும் வீதிகள்
- கிழக்கு வெளி வீதி
- காமராசர் சாலை
- பழைய குயவர் பாளையம் சாலை
அருகில் அமைந்த இடங்கள்
- மீனாட்சியம்மன் கோயில்
- புதுமண்டபம்
- திருமலை நாயக்கர் அரண்மனை
- எழுகடல் தெரு
- பத்துத் தூண் தெரு
- ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில்
- அரசமரம் பிள்ளையார் கோயில்
- நெல்பேட்டை
- வெற்றிலைப் பேட்டை
- மீன் வணிக வளாகம்
- சௌராஷ்டிர மேனிலைப் பள்ளி
- எம். ஏ. வி. எம். மேனிலைப் பள்ளி
- புனித மேரி ஆண்கள் மேனிலைப் பள்ளி
- புனித ஜோசப் பெண்கள் மேனிலைப் பள்ளி
- அம்சவள்ளி அசைவ உணவு விடுதி
- அன்பகம் அசைவ உணவு விடுதி
- தினமணி திரை அரங்கம்
- அலங்கார் திரை அரங்கம்
வங்கிகள்
- இந்தியன் வங்கி
- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
- கரூர் வைஸ்யா வங்கி
- எச்டிஎப்சி வங்கி
- லெட்சுமி விலாஸ் வங்கி
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.
- ↑ http://www.mapsofindia.com/std/india/tamilnadu/madurai.html