ஆள்கூறுகள்: 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E / 9.689000; 78.458100

மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SAFISRT
No edit summary
imported>SAFISRT
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Manamadurai Anandhavalli temple.jpg]]
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = மானாமதுரை நகராட்சி
|நகரத்தின் பெயர் = மானாமதுரை நகராட்சி

04:08, 27 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Manamadurai Anandhavalli temple.jpg

மானாமதுரை நகராட்சி
மானாமதுரை நகராட்சி
அமைவிடம்: மானாமதுரை நகராட்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E / 9.689000; 78.458100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் மானாமதுரை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

50,257 (2021)

3,723/km2 (9,643/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi)

90 மீட்டர்கள் (300 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.tnmunicipality.in/manamadurai


மானாமதுரை (Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். மானாமதுரை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

இது மாவட்டத் தலைநகரான சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E / 9.7; 78.48 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ தாஸ் மீனா அவர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.[6][7]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 52,131 வீடுகளும், 2,07,223 மக்கள்தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் (1,04,428) 50.39 சதவிகிதமும் பெண்கள் (1,02,795) 49.61 சதவிகிதமும் உள்ளனர். மேலும் 12 வயதுக்குட்பட்டோர் 22,403 பேர். கல்வியறிவு 69.99 சதவிகிதமாக உள்ளது. [8]

மக்கள் தொகை சமயம் வாரியாக(2011)
சமயம் சதவிகிதம்(%)
இந்து
60.17%
இஸ்லாமியம்
29.70%
கிறித்துவம்
8.05%
மற்றவை
02.08%
சாதி வாரி கணக்கெடுப்பு(2011)
சமூகம் சதவிகிதம்(%)
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
77.775%
பட்டியலினத்தவர்
22.224%
பழங்குடியினர்
0.001%

ஆட்சி

இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது மானாமதுரைக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மானாமதுரை நகராட்சியாக ஆனபோது அருகில் உள்ள பேரூராட்சிகளான திருப்புவனம், திருப்பாசேத்தி, இளையான்குடி ஆகியவை மானாமதுரையோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் காரைகுடியை அடுத்து மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக மானாமதுரை உருவெடுத்தது.[9]

பெயர் காரணம்

இராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி செல்லும் பொழுது வானரங்களின் உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "வானவீரன்மதுரை" என்று பெயர் வந்தது. அதுவே ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.[10]



கைவினை சிறப்புகள்

இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[11][12][13] மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.[14]

புவிசார் குறியீடு

மானாமதுரை மண்பாண்டக் கூட்டுறவுத் தொழில் சங்கம் 28/07/2016 அன்று மானாமதுரை மண்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றுகாக விண்ணப்பித்தது . உலக வர்த்தக அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் புவியியல் குறியீடுகள் பதிவகம், மானாமதுரை மட்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழை அதிகாரப்பூர்வமாக 31/03/2023 அன்று பத்திரிகை எண் 166 மற்றும் சான்றிதழ் எண் 446 இல் வழங்கியது. [15][16][17]

போக்குவரத்து

பேருந்து

மானாமதுரையில் மேல் கரையில் இயங்கிவந்த பேருந்து நிலையத்தால் ஊருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரிசெய்ய 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு வருடாந்திர பட்ஜெட்டில் மானாமதுரைக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுகப்பட்டதை தொடர்ந்து புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2002ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா கண்டது. இந்நிலையம் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிசெல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். இந்நிலையத்தில் கழிப்பறைகள், உணவகங்கள், எரிபொருள் நிறப்பகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து உள்ளது. இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், தூத்துக்குடி, பரமக்குடி, சாயல்குடி, இளையான்குடி போன்ற ஊர்களுக்கு பேருந்து சேவை உள்ளது.

மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.

ரயில்

மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் முக்கிய சந்திப்புகளில் ஒன்று. இது நகரின் தெற்கு பகுதியில், மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் தென்மேற்கில் விருதுநகர் சந்திப்பையும் வடமேற்கில் மதுரை சந்திப்பையும் தென்கிழக்கில் ராமேசுவரம் ரயில் முனையத்தையும் தென்மேற்கில் காரைக்குடி சந்திப்பியும் இணைக்கிறது. இந்நிலையம் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கட்டப்பட்ட முதல் 20 சந்திப்புகளில் ஒன்று. பின்பு 2001ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொலிவுபெற்றது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளது. ஆனால் முதல் மூன்று நடைமேடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

வானூர்தி

மானாமதுரைக்கு என்று தனி வானூர்தி நிலையம் கிடையாது. அருகில் உள்ள விமான நிலையங்கள்:

மருத்துவமனைகள்

  • தி லெப்ரசி மிஷன் தொழுநோய் சிறப்பு மருத்துவமனை, தயாபுரம்
  • அரசு மருத்துவமனை, மானாமதுரை
  • அரவிந்த் கண் மருத்துவமனை, மானாமதுரை கிளை
  • நிருபராஜன் உயிர்காப்பு மருத்துவமனை, புறவழிச்சாலை, மானாமதுரை.
  • செல்வா மருத்துவமனை, மானாமதுரை
  • ஜெயபால் மருத்துவமனை, மானாமதுரை.
  • வீரா காது மூக்கு தொண்டை சிகிச்சை மையம், மானாமதுரை
  • லக்ஷ்மி கன் பரிசோதனை மையம்
  • கண்ணன் மருத்துவமனை

போன்ற சில மருத்துவமனைகள் உள்ளன. மானாமதுரை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் பெரும்பாலான அவசர சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சையை நாடி மக்கள், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை இராசாசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள்

பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மானாமதுரை சந்திப்பு
  5. "Manamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  6. kumbakonam corporaon and 19 muniicipalites
  7. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  8. Manamadurai city Population Census 2011
  9. மானாமதுரை நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!". Dinamani. Retrieved 2023-09-04.
  11. "மானாமதுரை மட்பாண்டம்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-06-21.
  12. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
  13. http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print
  14. மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது
  15. https://search.ipindia.gov.in/GIRPublic/Application/Details/561
  16. Bureau, The Hindu (2023-04-24). "Tamil Nadu's Manamadurai pottery gets GI tag" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/manamadurai-pottery-gets-gi-tag/article66773064.ece. 
  17. Service, Express News (2023-04-01). "11 more TN products to get geographical indication honour soon". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-07-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மானாமதுரை&oldid=192859" இலிருந்து மீள்விக்கப்பட்டது