மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>SAFISRT No edit summary |
imported>SAFISRT |
||
| வரிசை 42: | வரிசை 42: | ||
==கைவினை சிறப்புகள்== |
|||
== இவ்வூரின் சிறப்பு == |
|||
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>{{Cite web |url=http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |title=மானாமதுரை மட்பாண்டம் |access-date=2013-06-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122957/http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> |
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>{{Cite web |url=http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |title=மானாமதுரை மட்பாண்டம் |access-date=2013-06-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122957/http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> |
||
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> |
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> |
||
==புவிசார் குறியீடு== |
|||
[[File:Manamadurai Certificate of GI.jpg|thumb||center]] |
|||
மானாமதுரை மண்பாண்டக் கூட்டுறவுத் தொழில் சங்கம் 28/07/2016 அன்று மானாமதுரை மண்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றுகாக விண்ணப்பித்தது . உலக வர்த்தக அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் புவியியல் குறியீடுகள் பதிவகம், மானாமதுரை மட்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழை அதிகாரப்பூர்வமாக 31/03/2023 அன்று பத்திரிகை எண் 166 மற்றும் சான்றிதழ் எண் 446 இல் வழங்கியது. <ref>https://search.ipindia.gov.in/GIRPublic/Application/Details/561</ref><ref>{{Cite news |last=Bureau |first=The Hindu |date=2023-04-24 |title=Tamil Nadu's Manamadurai pottery gets GI tag |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/manamadurai-pottery-gets-gi-tag/article66773064.ece |access-date=2024-07-01 |work=The Hindu |language=en-IN |issn=0971-751X}}</ref><ref>{{Cite web |last=Service |first=Express News |date=2023-04-01 |title=11 more TN products to get geographical indication honour soon |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Apr/01/11-more-tn-products-to-get-geographical-indication-honour-soon-2561524.html |access-date=2024-07-01 |website=The New Indian Express |language=en}}</ref> |
|||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
09:56, 16 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்
| மானாமதுரை நகராட்சி | |||||
| ஆள்கூறு | 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | சிவகங்கை | ||||
| வட்டம் | மானாமதுரை வட்டம் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | கா. பொற்கொடி, இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
50,257 (2021[update]) • 3,723/km2 (9,643/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi) • 90 மீட்டர்கள் (300 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.tnmunicipality.in/manamadurai | ||||
மானாமதுரை (Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும்.
இது மாவட்டத் தலைநகரான சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ தாஸ் மீனா அவர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.[6][7]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 52,131 வீடுகளும், 2,07,223 மக்கள்தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் (1,04,428) 50.39 சதவிகிதமும் பெண்கள் (1,02,795) 49.61 சதவிகிதமும் உள்ளனர். மேலும் 12 வயதுக்குட்பட்டோர் 22,403 பேர். கல்வியறிவு 69.99 சதவிகிதமாக உள்ளது. [8]
ஆட்சி
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது மானாமதுரைக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மானாமதுரை நகராட்சியாக ஆனபோது அருகில் உள்ள பேரூராட்சிகளான திருப்புவனம், திருப்பாசேத்தி, இளையான்குடி ஆகியவை மானாமதுரையோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் காரைகுடியை அடுத்து மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக மானாமதுரை உருவெடுத்தது.[9]
பெயர் காரணம்
இராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி செல்லும் பொழுது வானரங்களின் உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "வானவீரன்மதுரை" என்று பெயர் வந்தது. அதுவே ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.[10]
கைவினை சிறப்புகள்
இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[11][12][13] மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.[14]
புவிசார் குறியீடு
மானாமதுரை மண்பாண்டக் கூட்டுறவுத் தொழில் சங்கம் 28/07/2016 அன்று மானாமதுரை மண்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றுகாக விண்ணப்பித்தது . உலக வர்த்தக அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் புவியியல் குறியீடுகள் பதிவகம், மானாமதுரை மட்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழை அதிகாரப்பூர்வமாக 31/03/2023 அன்று பத்திரிகை எண் 166 மற்றும் சான்றிதழ் எண் 446 இல் வழங்கியது. [15][16][17]
போக்குவரத்து
பேருந்து
மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளதுர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மருத்துவமனைகள்
- தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
- அரசு மருத்துவமனை
கல்வி நிறுவனங்கள்
- ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
- அமிர்தா செவிலியர் கல்லூரி
- மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- சி. எஸ். ஐ காது கேளாதோர் பள்ளி
- ஏழாம் நாள் இறைவருகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி
- குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி
- குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
- புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- சூரிய நாராயண சாஸ்திரியார் ஆரம்ப பள்ளி
பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்
- ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்
- வீர அழகர் கோயில்
- பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
- தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
- திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
- பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மானாமதுரை சந்திப்பு
- ↑ "Manamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ Manamadurai city Population Census 2011
- ↑ மானாமதுரை நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!". Dinamani. Retrieved 2023-09-04.
- ↑ "மானாமதுரை மட்பாண்டம்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-06-21.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
- ↑ http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print
- ↑ மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது
- ↑ https://search.ipindia.gov.in/GIRPublic/Application/Details/561
- ↑ Bureau, The Hindu (2023-04-24). "Tamil Nadu's Manamadurai pottery gets GI tag" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/manamadurai-pottery-gets-gi-tag/article66773064.ece.
- ↑ Service, Express News (2023-04-01). "11 more TN products to get geographical indication honour soon". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-07-01.