தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>Gowtham Sampath சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = முதல் நிலை நகராட்சி |
|வகை = முதல் நிலை நகராட்சி |
||
|நகரத்தின் பெயர் = தாராபுரம் |
|நகரத்தின் பெயர் = தாராபுரம் (தாரை) |
||
(தாரை) |
|||
|latd = 10.73 |longd = 77.52 |
|latd = 10.73 |longd = 77.52 |
||
|locator position = right |
|locator position = right |
||
14:40, 10 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்
| தாராபுரம் (தாரை) | |||||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருப்பூர் | ||||||
| வட்டம் | தாராபுரம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சி தலைவர் | |||||||
| மக்கள் தொகை | 56,007 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 245 மீட்டர்கள் (804 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
தாராபுரம் (ஆங்கிலம்:Dharapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் அமராவதி ஆறு பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில்இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம்,காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும்.காற்றாலைகள் மிகுந்த நகரம்.தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது.
வரலாறு
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,842 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 56,007 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.4% மற்றும் பாலின விகிதம் 1,045 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,032 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.12%, இசுலாமியர்கள் 16.76%, கிறித்தவர்கள் 5.74% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[6]
காற்றாலைகள்
தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.காங்கயம்,பழனி,உடுமலை,பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ {{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}
- ↑ "Dharapuram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ தாராபுரம் நகர மக்கள்தொகை பரம்பல்