வானத்தைப் போல
வானத்தைப்போல | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | வி.ரவிச்சந்திரன் |
கதை | வசந்த் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜயகாந்த் பிரபுதேவா மீனா செந்தில் |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஆ. வில்சன் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | ஆஸ்கார் பிலிம்ஸ் பி. லிமிடெட் |
வெளியீடு | 14 சனவரி 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வானத்தைப்போல (Vaanathaippola) என்பது 2000 ஆம் ஆண்டில் தமிழ்-மொழியில் வெளியான குடும்பத் திரைப்படம் ஆகும். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன்,[1] கௌசல்யா, அஞ்சு அரவிந்த் மற்றும் பலர் நடித்துள்ளதுனர்.
ஆஸ்கார் பிலிம்ஸின் கீழ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார்[2] இசையமைத்துள்ளார் மற்றும் ஆர்தர் ஆ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தனது மூன்று இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தியாகங்களைச் செய்யும் அக்கறையுள்ள சகோதரனின் கதையை படம் சொல்கிறது.
இந்த படம் 14 சனவரி 2000 ஆம் ஆண்டில் வெளியாகி,[3] நேர்மறையான விமர்சனங்ககளை பெற்று மற்றும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது, மேலும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அத்துடன் இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றது.
நடிகர்கள்
- விஜயகாந்த் - வெள்ளைச்சாமி மற்றும் முத்து
- பிரபுதேவா - செல்வகுமார்
- மீனா - கௌரி, முத்துவின் மனைவி
- லிவிங்ஸ்டன் - சண்முகம்
- கௌசல்யா - நந்தினி, செல்வகுமாரின் காதலி
- அஞ்சு அரவிந்த் - சுமதி, சண்முகத்தின் மனைவி
- வினிதா - ராதா
- செந்தில்
- ரமேஷ் கண்ணா
- தேவன் - தர்மலிங்கம்
- ஆனந்தராஜ்
- எஸ். என். லட்சுமி
- கசான் கான்
- ராஜீவ்
- சபிதா ஆனந்த்
- ஆனந்த்
- பாலு ஆனந்த்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இரா. ரவிசங்கர், பா. விஜய், விவேகா நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "காதல் வெண்ணிலா" | இரா. இரவிசங்கர் | ஹரிஹரன் | |||||||
2. | "எங்கள் வீட்டில் எல்லா நாளும்" | நா. முத்துகுமார் & பா. விஜய் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன், அருண்மொழி | |||||||
3. | "காதல் வெண்ணிலா" | இரா. இரவிசங்கர் | பி. ஜெயச்சந்திரன் | |||||||
4. | "நதியே நயில் நதியே" | பா. விஜய் | சுக்விந்தர் சிங், அனுராதா ஸ்ரீராம் | |||||||
5. | "ரோஜாப்பூ மாலையிலே" | பா. விஜய் | கே. எஸ். சித்ரா, மனோ | |||||||
6. | "தாவணியே என்ன மயக்கிறயே" | விவேகா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | |||||||
7. | "வானில் வெண்ணிலா" | இரா. இரவிசங்கர் | சுஜாதா மோகன் | |||||||
8. | "மைனாவே மைனாவே" | விவேகா | உண்ணிமேனன், கே. எஸ். சித்ரா |
விருதுகள்
- 2000 ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதற் பரிசு) பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ "Dinakaran". www.dinakaran.com. Archived from the original on 26 June 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "Viveka about his second song (Thavaniye Enna)". Behindwoods. 2020-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
- ↑ "VANATHAIPPOL". chennaionline.com. Archived from the original on 7 July 2001. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
- ↑ "தாவணியே என்ன மயக்கிறயே பாடல் - விவேகா". Behindwoods. 2020-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.