பாபட்லா - 2595

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாபட்லா - 2595
BPT 2595
வேளாண் பெயர்
தேஜா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பாபட்லா - 2270 X NLR 33641
வகை
சடுதிமாற்ற நெல் வகை
காலம்
145 - 150 நாட்கள்[1]
மகசூல்
6,500 - 6,700 கிலோ எக்டேர்
வெளியீடு
2019
வெளியீட்டு நிறுவனம்
CVRC / SVRC, பாபட்லா[2]
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

பாபட்லா - 2595 (BPT 2595) முன்மொழிவு எண்: (IET 25486)[3] எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 2270 நெல் இரகத்தை மரபணுத் திரிபு முறையில் இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, தேஜா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

காலம்

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 145 - 150 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது.[1] சம்பா சாகுபடி பருவத்தில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, ஒற்றை போகப் பயிர் சாகுபடிக்கு உகந்த, நீர்ப்பாசன நிலப் பகுதிகளான குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[3]

மகசூல்

பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) பூஞ்சை நோய்க்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 2595, ஒரு எக்டேருக்கு சுமார் 6,500 முதல், 6,700 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் இதன் அரிசி உறையாத மற்றும் உடையாத, நடுத்தர நல்ல சமையல் தரத்துடன் உள்ளதாக கருதப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Teja (BPT 2595)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-20.
  2. Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
  3. 3.0 3.1 "Indian Rice Varietal Information Teja (BPT 2595)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-20.
"https://tamilar.wiki/w/index.php?title=பாபட்லா_-_2595&oldid=433653" இலிருந்து மீள்விக்கப்பட்டது