பரமக்குடி - 4

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பரமக்குடி (ஆர்) - 4 (PMK (R) 4)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பந்த்தான் - 10 X ஐ இ டி - 9911
வகை
புதிய நெல் வகை
காலம்
100 – 105 நாட்கள்
மகசூல்
3700 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
2009
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

பரமக்குடி (ஆர்) - 4 (PMK (R) 4 அல்லது அண்ணா (நெல்) 4 (ANNA (R) 4)[1] எனப்படும் இந்த நெல் வகை, Pant dhan 10 மற்றும் IET 9911 ஆகிய நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[2]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.[3]

காலம்

குறுகியக் கால நெற்பயிரான இது, 100 – 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகிய கால நெற்பயிர்கள், சம்பா பருவமான செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடுவு செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "New varieties of Paddy - PMK(R) 4 or Anna(R) 4". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. Retrieved 2019-06-25.
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
  3. "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. Retrieved 2017-09-17.
"https://tamilar.wiki/w/index.php?title=பரமக்குடி_-_4&oldid=426470" இலிருந்து மீள்விக்கப்பட்டது