புதுவை - 1
| புதுவை - 1 PY 1 |
|---|
| வேளாண் பெயர் |
| புதுவைப் பொன்னி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பொன்னி X பன்னாட்டு நெல் - 8 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 130 - 135 நாட்கள் |
| மகசூல் |
| 5,500 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1985 |
| வெளியீட்டு நிறுவனம் |
| புதுவை வேளாண் அறிவியல் நிலையம் |
| மாநிலம் |
| புதுச்சேரி |
| நாடு |
புதுவை - 1 (PY 1), வேளாண் வழக்கு; புதுவைப் பொன்னி (Puduvai Ponni) எனப்படும் இந்த நெல் வகை, பொன்னி மற்றும் பன்னாட்டு நெல் - 8 போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[1]
வெளியீடு
இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1985 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2] வேறொரு மூலத்தில், 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.[3]
காலம்
மத்தியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற மத்தியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[4][5]
சாகுபடி
உப்பு நிலத்தில் சகித்து வளரக்கூடிய இந்த நெல் வகை,[4] இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[1]
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை மகசூல் தரக்கூடியது.[4]
- இவ்வகையின் அரிசி சன்ன (மெல்லிய) இரகமாக காணப்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "PY 1". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2014-08-10. Retrieved 2018-06-27.
- ↑ "Indian Rice Varietal InformationPaduvai Ponni-1 (Py-1)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்). 2018. Retrieved 2025-09-28.
- ↑ PUDUCHERRY P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released: PY-l (Puduvai Ponni)
- ↑ 4.0 4.1 4.2 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). 2018. Retrieved 2018-06-28.
- ↑ "Variety PY1". btistnau.in (ஆங்கிலம்). 2018. Archived from the original on 2020-08-08. Retrieved 2018-07-03.