ஆடுதுறை - 55
| ஆடுதுறை - 55 ADT 55 |
|---|
| வேளாண் பெயர் |
| ADT 55 |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஆடுதுறை - 43 X IRBB 60[1] |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6000 கிலோ எக்டேர்[2] |
| வெளியீடு |
| 2021[3] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 55 அல்லது ஏடிடீ - 55 (ADT 55) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 43 மற்றும் IRBB 60 நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் கலப்பின நெல் இரகமாகும்.[1]
காலம்
குறுகிய கால சாகுபடிக்கு உகந்ததாக உள்ள இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. கார், குறுவை, நவரை மற்றும் கோடைப் போன்ற பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, தமிழ்நாட்டின் நீர்ப்பாசன வசதிப் பெற்ற இடங்களுக்கு ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
மகசூல்
பாக்டீரியா மற்றும் இலைக் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பைக் கொண்டுள்ளதாக கருதப்படும் ஆடுதுறை - 55, ஒரு எக்டேருக்கு சராசரியாக 6000 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]
வெளியீடு
தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2021 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 55 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
சாகுபடி
சம்பா பருவத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் காவிரி கழிமுக மண்டலம் போன்ற பாக்டீரியா இலை கருகல் நோய் கடுமையான பிரச்சனையாக உள்ள பகுதிகளுக்கு இந்த நெல் இரக்கத்தை பயிரிடப் பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Season and Varieties: Rice ADT 55". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-29.
- ↑ 2.0 2.1 2.2 "Big gift for Indian farmers on Pongal; TNAU releases new crop varieties to increase agricultural production". news.agropages.com (ஆங்கிலம்) - © 2006-2025. Retrieved 2025-06-29.
- ↑ 3.0 3.1 "Table: 4 Details of Varieties Recommended for Notification" (PDF). seednet.gov.in (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-06-28.