மடு முழுங்கி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மடு முழுங்கி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
175 - 180 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு 20 மூடைகள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

மடு முழுங்கி (Madu Muzhungi) என்பது, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும்.[1] இது மழை மற்றும் வெயில் காலங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையாகும். மேலும், புயல் மற்றும் அடை மழைக் காலங்களில் நிலத்தில் சாயாமல் செங்குத்தாக வளரக்கூடியது.[2]

பின்னணி

நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 175 – 180 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. நெல் பழுப்பு நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூடைகள் மகசூல் தருவதாக கூறப்படும் இதன் அரிசியில், இரும்புச் சத்து, நார்ச் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன என்றும், இதனால் குருதிச்சோகை, கெட்ட கொழுப்பு கரைதல், எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய் ஆகிய பல வித நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாக கருதப்படுகிறது.[2]

புற இணைப்புகள்

சான்றுகள்

  1. Phytonutrients analysis in ten popular traditional Indian rice landraces (Oryza sativa L.)
  2. 2.0 2.1 "பருவங்களை தாங்கி வளரும்'மடுமுழுங்கி' ரக நெல்". www.dinamalar.com (தமிழ்) - ஆக 24, 2022. Retrieved 2025-09-10.
"https://tamilar.wiki/w/index.php?title=மடு_முழுங்கி&oldid=457121" இலிருந்து மீள்விக்கப்பட்டது