பாபட்லா - 2270

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாபட்லா - 2270
BPT 2270
வேளாண் பெயர்
பவபுரி சன்னலு
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பாபட்லா - 5204 X CR 15 MR 1523
வகை
கலப்பின நெல் வகை
காலம்
160 - 165 நாட்கள்[1]
மகசூல்
6000 - 6500 கிலோ எக்டேர்
வெளியீடு
2010[2]
வெளியீட்டு நிறுவனம்
CVRC / SVRC, பாபட்லா[3]
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

பாபட்லா - 2270 (BPT 2270) எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 5204 (BPT 5204) மற்றும் CR 15 MR 1523 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பவபுரி சன்னலு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

காலம்

நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 160 - 165 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா சாகுபடி பருவத்தில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, சம்பாப் பருவத்தில் ஆந்திர மாநில கிருஷ்ணா ஆற்றின் மேற்கு கழிமுகப் பகுதிகள் மற்றும் தெலுங்கானா மாநில நாகார்ஜுன சாகர் அணைப் பகுதிகள் போன்ற ஈரத்தன்மையுள்ள நிலங்களில் பெருமளவு பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]

மகசூல்

பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) மற்றும் குலைநோய்க்கு சகிப்புத்தன்மை கொண்ட பாபட்லா - 2270, ஒரு எக்டேருக்கு சுமார் 6,000 முதல், 6500 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் மழை மற்றும் மிதமான வெள்ளப்பெருக்கு காலத்தில் முழுமையாக நிலைத்து நிற்கும் தன்மை கொண்ட இதன் நெற்பயிர்கள், 7 நாட்கள் வரை நீரில் மூழ்கும் நிலையிலும் தாங்கும் திறன் உடையதாகவும், உறையாத மற்றும் சிதறாத, நடுத்தர மெல்லிய தானியத்தை கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "BhavapuriSannalu (BPT 2270)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-16.
  2. Varieties released from RRU Bapatla
  3. Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
"https://tamilar.wiki/w/index.php?title=பாபட்லா_-_2270&oldid=433650" இலிருந்து மீள்விக்கப்பட்டது