நிலந்தரு திருவிற் பாண்டியன்
Jump to navigation
Jump to search
‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. [1]
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ [2] எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன் [3]
‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் நாகன் [4]
இவற்றைக் காலக் கண்ணில் நோக்கும்போது தெளிவு ஒன்று பிறக்கும்.
- நிலம் தந்த பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது (கி. மு. நாலாம் நூற்றாண்டு அளவிலோ அதற்கு முன்னோ)
- நிலம் தந்த நெடியோன் சங்க காலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன். நாகன் இவனது படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன்.
“ | நிலந்தந்த பேருதவிப்" "பொலந்தார் மார்பின்" |
” |
— (60-61) |
என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
அடிக்குறிப்பு
- ↑ தொல்காப்பியப் பாயிரம்
- ↑ உம்பல் = யானை - மதுரைக்காஞ்சி 60-61
- ↑ மதுரைக்காஞ்சி 55-59
- ↑ புறநானூறு 179