சடையவர்மன் விக்கிரமன்
Jump to navigation
Jump to search
இவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்த ஒரு பாண்டியமன்னன் ஆவான். இவன் கல்வெட்டுகள் அச்சிறுபாக்கம்,திருப்புட்குழி,திருமாணிகுழி,திருக்கோயிலூர் முதலிய ஊர்களில் காணப்படுகிறது ஆதலால் இவன் தொண்டை மண்டலம், நடுநாட்டிலும் அரசப் பிரதிநிதியாயிருத்தல் வேண்டும்.[1] தில்லை கோயிலில் இடம்பெற்றுள்ள சில பாடல்கள்,இவன் புரிந்த போர்களையும்,அடைந்த வெற்றிகளையும் கூறுகின்றன.[2] சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடைபெற்ற போர்களுள் சிலவற்றை இவன் படைத்தலைமை வகித்து நடத்தியிருக்க வேண்டும்.இவனுக்கு புவனேகவீரன் என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டிருகிறது என்பதனை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.[3]இவனது கல்வெட்டுகள் கி.பி.1249 முதல் கி.பி.1258 வரை கிடைக்கிறது.பிறச் செய்திகள் அறியப்படவில்லை.[4]