சம்மாந்துறை தேர்தல் தொகுதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சம்மாந்துறை தேர்தல் தொகுதி (Sammanthurai electorate) அல்லது நிந்தவூர் தேர்தல் தொகுதி (Nintavur Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். ஆரம்பத்தில் நிந்தவூர் தொகுதி என அழைக்கப்பட்டு வந்த இத்தேர்தல் தொகுதி சூலை 1977 முதல் சம்மாந்துறைத் தேர்தல் தொகுதி எனப் பெயர் மாற்றப்பட்டது. இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய நகர்களையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் சம்மாந்துறை தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
மார்ச் 1960 எம். ஐ. எம். அப்துல் மஜீத் 1960-1965
சூலை 1960
1965 எம். எம். முஸ்தபா ஐக்கிய தேசியக் கட்சி 1965-1977
1970
1977 எம். ஏ. அப்துல் மஜீத் 1977-1989

தேர்தல்கள் - 1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்கள்

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். ஐ. எம். அப்துல் மஜீத் வானொலிப் பெட்டி 10,017 54.81%
எம். எம். முஸ்தபா குடை 5,390 29.49%
காஜி எம். மிர்சா சேவல் 2,655 14.53%
எம். செரிப். காதர் சூரியன் 215 1.18%
செல்லுபடியான வாக்குகள் 18,277 100.00%
நிராகரிக்கப்பட்டவை 118
மொத்த வாக்குகள் 18,395
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 21,087
வாக்குவீதம் 87.23%

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்கள்

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். ஐ. எம். அப்துல் மஜீத் சேவல் 12,115 73.63%
எம். ஏ. எம். ஜலால்தீன் வானொலிப் பெட்டி 4,339 26.37%
செல்லுபடியான வாக்குகள் 16,454 100.00%
நிராகரிக்கப்பட்டவை 94
மொத்த வாக்குகள் 16,548
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 21,087
வாக்குவீதம் 78.47%

1965 நாடாளுமன்றத் தேர்தல்கள்

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். எம். முஸ்தபா ஐக்கிய தேசியக் கட்சி யானை 13,789 59.46%
எம். ஐ. எம். அப்துல் மஜீத் சேவல் 9,400 40.54%
செல்லுபடியான வாக்குகள் 23,189 100.00%
நிராகரிக்கப்பட்டவை 210
மொத்த வாக்குகள் 23,399
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,497
வாக்குவீதம் 88.31%

1970 நாடாளுமன்றத் தேர்தல்கள்

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். எம். முஸ்தபா ஐக்கிய தேசியக் கட்சி யானை 13,481 49.12%
எம். ஐ. எம். அப்துல் மஜீத் வானொலி 13,406 48.85%
ஐ. எச். முகம்மது காசிம் இலங்கை சுதந்திரக் கட்சி கை 556 2.03%
செல்லுபடியான வாக்குகள் 27,443 100.00%
நிராகரிக்கப்பட்டவை 84
மொத்த வாக்குகள் 27,527
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,718
வாக்குவீதம் 92.63%

1977 நாடாளுமன்றத் தேர்தல்கள்

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். ஏ. அப்துல் மஜீத் யானை 13,642 54.87%
எச். எல். எம். ஹாசீம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 8,615 34.65%
அப்துல் ஜபார் கை 2,605 10.48%
செல்லுபடியான வாக்குகள் 24,862 100.00%
நிராகரிக்கப்பட்டவை 82
மொத்த வாக்குகள் 24,944
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 27,308
வாக்குவீதம் 91.34%

மேற்கோள்கள்

  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  4. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  5. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.