பொத்துவில் தேர்தல் தொகுதி
பொத்துவில் தேர்தல் தொகுதி (Pottuvil Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். சூலை 1977 தேர்தலில் இத்தொகுதியில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் பொத்துவில் தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
1947 நாடாளுமன்றத் தேர்தல்கள்
1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். எம். இப்ராகிம் ஹாஜியார் | சுயேட்சை | தராசு | 7,407 | 57.35% |
ஏ. ஆர். ஏ. ராசிக் | விளக்கு | 5,508 | 42.65% | |
செல்லுபடியான வாக்குகள் | 12,915 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 330 | |||
மொத்த வாக்குகள் | 13,245 | |||
பதிவான வாக்காளர்கள் | 18,164 | |||
வாக்குவீதம் | 72.92% |
1952 நாடாளுமன்றத் தேர்தல்கள்
24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். எம். இப்ராகிம் ஹாஜியார் | சுயேட்சை | தராசு | 8,093 | 51.79% |
எம். எம். முஸ்தபா | நட்சத்திரம் | 7,534 | 48.21% | |
செல்லுபடியான வாக்குகள் | 15,627 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 177 | |||
மொத்த வாக்குகள் | 15,804 | |||
பதிவான வாக்காளர்கள் | 21,187 | |||
வாக்குவீதம் | 74.59% |
1956 நாடாளுமன்றத் தேர்தல்கள்
5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். எம். முஸ்தபா | இலங்கைத் தமிழரசுக் கட்சி | வீடு | 8,355 | 52.46% |
எம். ஐ. எம். அப்துல் மஜீத் | நாற்காலி | 4,626 | 29.05% | |
எம். எஃப். அப்துல் ஜவாது | குடை | 2,944 | 18.49% | |
செல்லுபடியான வாக்குகள் | 15,925 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 201 | |||
மொத்த வாக்குகள் | 16,126 | |||
பதிவான வாக்காளர்கள் | 25,273 | |||
வாக்குவீதம் | 63.81% |
1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்கள்
19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். ஏ. அப்துல் மஜீத் | சுயேட்சை | சேவல் | 9,874 | 70.92% |
எம். எஃப். அப்துல் ஜவாது | குடை | 2,138 | 15.36% | |
வி. சந்திரசேகரா | ஏணி | 1,910 | 13.72% | |
செல்லுபடியான வாக்குகள் | 13,922 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 181 | |||
மொத்த வாக்குகள் | 14,103 | |||
பதிவான வாக்காளர்கள் | 18,250 | |||
வாக்குவீதம் | 77.28% |
1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்கள்
20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். ஏ. அப்துல் மஜீத் | சுயேட்சை | வானொலி | 11,591 | 93.27% |
எம். இசட். கே. எம். காரியப்பர் | All Ceylon Islamic United Front | சூரியன் | 837 | 6.73% |
செல்லுபடியான வாக்குகள் | 12,428 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 121 | |||
மொத்த வாக்குகள் | 12,549 | |||
பதிவான வாக்காளர்கள் | 18,250 | |||
வாக்குவீதம் | 68.76% |
1965 நாடாளுமன்றத் தேர்தல்கள்
22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். ஏ. அப்துல் மஜீத் | சுயேட்சை | வானொலிப்பெட்டி | 6,768 | 35.22% |
என். தர்மலிங்கம் | சேவல் | 5,296 | 27.56% | |
வை. எம். முஸ்தபா | தராசு | 3,217 | 16.74% | |
யூ. எம். சுலைமாலெப்பை | யானை | 2,911 | 15.15% | |
எம். எஸ். காதர் | Federal Party | வீடு | 871 | 4.53% |
பி. ஏ. லால் விஜயவர்தனா | சில்லு | 153 | 0.80% | |
செல்லுபடியான வாக்குகள் | 19,216 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 185 | |||
மொத்த வாக்குகள் | 19,401 | |||
பதிவான வாக்காளர்கள் | 23,586 | |||
வாக்குவீதம் | 82.26% |
1970 நாடாளுமன்றத் தேர்தல்கள்
27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
எம். ஏ. அப்துல் மஜீத் | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 10,610 | 42.18% |
தர்மலிங்கம் நடராஜா | சேவல் | 9,335 | 37.11% | |
எம். ஐ. அப்துல் ஜப்பார் | கை | 5,209 | 20.71% | |
செல்லுபடியான வாக்குகள் | 25,154 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 155 | |||
மொத்த வாக்குகள் | 25,309 | |||
பதிவான வாக்காளர்கள் | 28,282 | |||
வாக்குவீதம் | 89.49% |
1977 நாடாளுமன்றத் தேர்தல்கள்
21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தலில் பொத்துவில் தொகுதி இரு-உறுப்பினர் தேதல் தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன. ஏம். எம். முகம்மது ஜலால்தீன், எம். கனகரத்தினம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அதன் முடிவுகள்[9]:
வேட்பாளர் | Party | Symbol | Votes | % |
---|---|---|---|---|
ஏ. எம். முகம்மது ஜலால்தீன் | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 30,315 | 34.08% |
எம். கனகரத்தினம் | தமிழர் விடுதலைக் கூட்டணி | சூரியன் | 23,990 | 26.97% |
எம்.. எம். முஸ்தபா | கை | 22,378 | 25.16% | |
நடராஜா தர்மலிங்கம் | மணிக்கூடு | 7,644 | 8.59% | |
செய்யது அகமது மௌலானா | வானொலி | 2,902 | 3.26% | |
பி. எம். எஸ். ஜனநாயக்கா | விளக்கு | 1,458 | 1.64% | |
எஸ். எல். அப்துல் சதார் | நட்சத்திரம் | 272 | 0.31% | |
செல்லுபடியான வாக்குகள் | 88,959 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 912 | |||
மொத்த வாக்குகள் | 89,871 | |||
பதிவான வாக்காளர்கள் | 49,691 | |||
வாக்குவீதம் | 180.86% |
தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றி பெற்ற எம். கனகரத்தினம் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவினார். இவர் 1990 சூலை 15 இல் கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-07-26.