கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளி பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி. கோலக்கிரை மாவட்டத்தில் அமைந்து உள்ளது. 1945 டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி தோற்றுவிக்கப் பட்டது.

முன்பு இந்தப் பள்ளிக்கு பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Pasir Gajah Kelantan) என்று பெயர். இப்போது பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி (SJKT Pasir Gajah Kelantan) என்று மாற்றம் கண்டுள்ளது.[1]

1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1990-களில் மாணவர்ப் பற்றாக்குறை. அதனால் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தேசிய மலாய்ப் பள்ளிகளாக மாற்றப் பட்டன. எஞ்சிய ஒரே ஒரு தமிழ் பள்ளிதான் இந்தப் பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி.[2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் ஆசிரியர்கள் மாணவர்கள்
DBD7404 பாசீர் காஜா தோட்டம் SJK(T) Ladang Pasir Gajah[3] பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி 18000 கோலா கிராய் 9 36

மேற்கோள்கள்


மேலும் காண்க

மேலும் இணைப்புகள்