கண்டனூர்
கண்டனூர் காரைக்குடி (ஆங்கிலம்:Kandanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு புறநகர் பகுதி மற்றும் பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் கண்டனூர் என இரண்டு உட்கிராமங்கள் கொண்டது காரைக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒன்று
காரைக்குடி - அறந்தாங்கி செல்லும் பாதையில், சிவகங்கையிலிருந்து 63 கிமீ தொலைவில் கண்டனூர் உள்ளது. காரைக்குடிதொடருந்து சந்திப்புநிலையம் 9 கீமீ தொலைவில் உள்ளது
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,959 வீடுகளும், 7,696 மக்கள்தொகையும் கொண்டது. [1] இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது காரைக்குடி மாநகராட்சி பகுதி ஆகும். காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
வரலாறு
கோயில்கள்
கண்டனூர் கோயில்கள்
பாலையூர் (ஆங்கிலம் : Palaiyur)கோயில்கள்
பாலையூரில் மேலத்தெரு என்று அழைக்கப்படும் மேற்கு வீதியில் நான்கு கோவில்கள் ஒருங்கே அமைந்துள்ளன. அதில் இடது புறத்தில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகில் மகாலெட்சுமி நாராயணன் கோவிலும், இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மரத்தாலான தேர் ஒன்று உள்ளது.
வலப்புறத்தில் தேரடிக் கருப்பர் கோவில் உள்ளது (இந்தக் கோவிலின் அருகில் மாரியம்மன் கோவில் தேரினைப் பாதுகாக்கும் தேர்க்கொட்டகை உள்ளது). இந்த நான்கு கோவில்களுக்கும் அருகில் பாலையூர் கண்மாய் அமைந்துள்ளது. (அரை கிலோ மீட்டர் தொலைவு) பாலையூரில் கீழத்தெரு என்று அழைக்கப்படும் கிழக்கு வீதியில் முத்திரிச் சந்தி கருப்பர், ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு மிக அருகில் கிழக்குத் திசையில் செல்லும் வழியில் சின்னக் கருப்பர் கோவில் அமைந்துள்ளன.