உ. இரா. அனந்தமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உ. இரா. அனந்தமூர்த்தி
U R Ananthamurthy Z1.JPG
இயற்பெயர் உ. ரா. அனந்தமூர்த்தி
பணி பேராசிரியர், எழுத்தாளர், கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர்
தேசியம் இந்தியர்
வகை கதை, இலக்கியம்
இலக்கிய இயக்கம் கன்னட இலக்கியம்

யூ. ஆர். அனந்தமூர்த்தி என அழைக்கப்படும் உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி (Udupi Rajagopalacharya Ananthamurthy, கன்னடம்: ಉಡುಪಿ ರಾಜಗೋಪಾಲಾಚಾರ್ಯ ಅನಂತಮೂರ್ತಿ; 21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014) கன்னட எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்.[1] 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2][3] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது[4].

புதினங்கள்

  • சம்ஸ்காரா
  • பாரதிபுரா
  • அவஸ்தே
  • பவா
  • திவ்யா

திரைத்துறை

இவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு.

மொழிபெயர்ப்பு

அவருடைய சம்ஸ்காரா, அவஸ்தை உள்ளிட்ட சில புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1993இல் சாகித்ய அகாதெமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5].

விமர்சனம்

இந்தியாவில் சாதி முறைகளை விவரிக்கும் வர்ணாஸ்ரமங்களை எதிர்த்த இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் நாட்டைவிட்டுச் சென்றுவிடுவேன் என்று கருத்துக்கூறியதால் பல இன்னல்களுக்கு உள்ளானார்.[6]

மறைவு

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனந்தமூர்த்தி, ஆகஸ்ட் 22, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[7].

சான்றுகள்

  1. "U.R. Ananthamurthy". International literature festival Berlin. Foundation for Art and Politics and the Berliner Festspiele, German UNESCO committee. பார்க்கப்பட்ட நாள் 2007-06-28.
  2. http://win2vin.wordpress.com/2009/09/02/list-of-jnanpith-award-winners-indias-highest-literary-award/
  3. "Jnanapeeth Awards". Ekavi foundation. Ekavi. Archived from the original on 2006-04-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-28.
  4. "Bharat Ratna given to CS". Online webpage of Indian Express. Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29.
  5. சா.கந்தசாமி, அனந்தமூர்த்தி என்னும் அருங்கலைஞன், தினமணி, 29.8.2014
  6. கர்நாடக எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவு
  7. "Jnanpith Award winner U.R. Ananthamurthy passes away". Online webpage of The Hindu. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-08-22.

இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=உ._இரா._அனந்தமூர்த்தி&oldid=19745" இருந்து மீள்விக்கப்பட்டது