ஆத்திரேலியத் தமிழர்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
தமிழ் 32,701(2006)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சிட்னி, மெல்பேர்ன், பிறிஸ்பேன், பேர்த், அடிலெய்ட் | |
சமயங்கள் | |
இந்து, கிறித்தவம் |
ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர், தமிழ் அவுஸ்திரேலியர்கள், Tamil Australian) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவு
இதன்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன.
2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது.
இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கின்றனர். முக்கியமாக சீனாவிலிருந்து 191,000 பேரும் இந்தியாவிலிருந்து 163,000 பேரும் இங்கு குடியேறியுள்ளனர்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளியேறியவர்களைக் கழித்தால், தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2011 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் 870,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் நால்வரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் ஆவார்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்ற தினத்தன்று 23.4 மில்லியன் பேர் எண்ணப்பட்டுள்ளநிலையில் இது 2011 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8 வீத அதிகரிப்பாகும்.
இவர்களில் 80 வீதமானவர்கள் விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, ACT ஆகிய பகுதிகளிலேயே வசிக்கின்றனர்.
சென்சஸ் தரவுகளின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் தாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 440,300 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த சனத்தொகையின் 1.9 வீதமாகும்.
அதேநேரம் தமக்கு மதமில்லை-No Religion என பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 22 வீதத்திலிருந்து 30 வீதமாக அதிகரித்துள்ளது.
தமிழரின் குடித்தொகை
ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 28,055 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். 27,352 பேர் இலங்கையில் பிறந்தவர்கள். 9,979 பேர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் ஆவர்.
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,180 பேரில் அதிகளவானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கிறார்கள்.
இதில் அதிகளவு தமிழ்பேசுவோரைக் கொண்ட suburb-ஆக Westmead காணப்படுகின்றது. இங்கே 1425 பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இரண்டாமிடத்தில் 1404 பேருடன் Toongabbie-உம், மூன்றாமிடத்தில் 1307 பேருடன் Wentworthville-உம் காணப்படுகின்றது.
அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் Dandenong-இல் 1389 பேரும் Glenwaverly-இல் 1127 பேரும் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்.
தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது.
அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
மாநிலம்/மண்டலம் |
1991 | 1996 | 2001 | 2006[2] |
நியூ சவுத் வேல்ஸ் | 4,994 | 9,072 | 12,087 | |
விக்ரோறியா | 4,042 | 6,251 | 7,968 | |
மேற்கு அவுஸ்திரேலியா | 823 | 1,110 | 1,368 | |
குயின்ஸ்லாந்து | 499 | 895 | 1,149 | |
தெற்கு அவுஸ்திரேலியா | 415 | 502 | 536 | |
அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம் | 381 | 618 | 751 | |
வட மண்டலம் | 154 | 158 | 126 | |
தாஸ்மானியா | 68 | 74 | 82 | |
மொத்தம் |
11,376 | 18,690 | 24,067[3] | ' |
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி ஆ. கந்தையா குறிப்பிடுகிறார்:
- வாழ்வதற்கு உகந்த தட்ப-வெப்ப நிலை.
- வேலை வாய்ப்பு மிகுந்த மாநிலம்.
பிறந்த நாடுகள் அடிப்படையில்
அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன:
பிறந்த நாடு |
1996 | 2001 | 2006[2] |
அவுஸ்திரேலியா | 1,772 | 2,420 | |
இலங்கை | 10,504 | 12,901 | |
இந்தியா | 3,721 | 5266 | |
மலேசியா | 1,309 | 1,381 | |
சிங்கப்பூர் | 599 | 788 | |
பிரித்தானியா | 198 | 176 | |
தென் ஆபிரிக்கா | 102 | 00 | |
ஐரோப்பிய நாடுகள் | 59 | 105 | |
நியூசீலாந்து | 36 | 121 | |
பீஜி | 24 | 27 | |
அமெரிக்கா/கனடா | 26 | 53 |
முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு உயர்கல்வி பெற வந்தவர். மேற்கத்திய இசையில் உலகப்புகழ் பெற்ற கலைஞர். இப்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார்.
தமிழ் அமைப்புகள்
தமிழ் பள்ளிகள்
எதிர்ப்புப் போராட்டங்கள்
தமிழ் ஊடகங்கள்
தொலைக்காட்சி சேவைகள்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன.
- ஜிடிவி
- சன் டிவி
வானொலி சேவைகள்
அவுஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
- சிறப்பு ஒலிபரப்புச் சேவை - (SBS - Special Broadcasting Service) அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு 1978 இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
- இன்பத் தமிழ் ஒலி - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் 1996 முதல் சிட்னியிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
- அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - 24 மணி நேர வானொலி 2002 இல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. தனக்கெனத் தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
- தமிழ் முழக்கம் - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் 1992 முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் சனிக்கிழமைகளில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
- முத்தமிழ் மாலை - 1993 ஆம் ஆண்டு முதல் பாலசிங்கம் பிரபாகரன் அவர்களினால் ஞாயிறு தோறும் 2 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
- தமிழ்க் குரல் - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் 1984 முதல் திங்கள் தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
- தமிழ் ஓசை - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் 1987 முதல் வியாழன் தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
- சங்கநாதம் - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் 1993 முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
- தமிழ்ப் பூங்கா - மெல்பர்ணிலிருந்து 2001 முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
- வடமண்டலத் தமிழ் வானொலி - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி 1982 ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
- பிறிஸ்பன் தமிழ் ஒலி - பிறிஸ்பனில் இருந்து 1986 முதல் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
- தமிழ் ஒலி - பேர்த்தில் இருந்து 1981 முதல் திங்கள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
- தமிழ்ச் சோலை - பேர்த்தில் இருந்து 1996 முதல் வெள்ளி தோறும் ஒலிபரப்பாகின்றது. இது மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.
- தமிழ்ச் சங்க வானொலி - கன்பரா தமிழ்ச் சங்கம் 1987 தொடக்கம் வியாழன் தோறும் ஒர் மணிநேரம் இந்நிகழ்ச்சியினை நடத்துகின்றது.
செய்திப் பத்திரிகைகள்
உதயம், ஈழமுரசு என்ற இரண்டு செய்திப் பத்திரிகைகள் வெளிவந்தன. இரண்டும் நிறுத்தப்பட்டு விட்டன.
சஞ்சிகைகள்
- கலப்பை - காலாண்டு சஞ்சிகை 1990கள், 2000களில் வெளிவந்தது.
தமிழ் நூலகங்கள்
தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர்.
- தமிழ் அறிவகம் சிட்னியில் 1991 முதல் இயங்கி வருகின்றது. ஏராளமான தமிழ் நூல்களையும், அறிக்கைகளையும், ஆய்வு நூல்களையும் கொண்டுள்ளது. உலகத் தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இங்கு பார்வைக்கு உள்ளன.
- கன்பரா தமிழர் ஏடகம் 1999 முதல் கன்பராவில் இயங்கி வருகின்றது.
உசாத்துணை
- கந்தையா, ஆ., கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும், 2004
- The Australian Bureau of Statistics
அடிக்குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081209074027/http://www.immi.gov.au/media/publications/research/_pdf/poa-2008.pdf.
- ↑ 2.0 2.1 2006 ஆம் ஆண்டு அரசாங்கக் குடிசன மதிப்பீட்டு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை
- ↑ "வீட்டில் பேசும் மொழி (AUSTRALIAN BUREAU OF STATISTICS 2001)" இம் மூலத்தில் இருந்து 2006-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060919182805/http://www.abs.gov.au/websitedbs/D3310116.NSF/85255e31005a1918852556c2005508d8/c47ad86d67c1466bca256ce0007e8d6b/$FILE/ATTH23CO/Exstatic%202%202005,%20Australia.xls.
வெளி இணைப்புக்கள்
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அவுஸ்திரேலியா பரணிடப்பட்டது 2006-09-09 at the வந்தவழி இயந்திரம்
- SBS தமிழ் வானொலி பரணிடப்பட்டது 2006-08-20 at the வந்தவழி இயந்திரம்
- ஈழத் தமிழர் கழகம், சிட்னி பரணிடப்பட்டது 2005-07-17 at the வந்தவழி இயந்திரம்
- சிட்னி முருகன் கோயில்
- பிறிஸ்பேன் செல்வவிநாயகர் கோயில்
- தமிழ் பிரிஸ்பேன் அமைப்பின் வலைப்பக்கம் பரணிடப்பட்டது 2010-05-04 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் பிரிஸ்பேன் மின்னஞ்சல் குழு பரணிடப்பட்டது 2009-09-17 at the வந்தவழி இயந்திரம்
- பிறிஸ்பேன் தமிழரின் இணையப்பக்கம்
- அடிலெய்ட் தமிழர் கழகம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சன் டிவி, அவுஸ்திரேலியா பரணிடப்பட்டது 2006-08-19 at the வந்தவழி இயந்திரம்
- Spotlighting Australia’s Languages: Tamil பரணிடப்பட்டது 2015-09-08 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)