ரீயூனியன் தமிழர்
ரீயூனியன் தமிழர் என்போர் தமிழ்ப் பின்புலம் கொண்ட ரீயூனியன் நாட்டு குடிமக்கள். சுமார் 100000 மேலான குடிமக்கள் தமிழர்கள் என கூறப்படுகிறது.[1] இவர்களில் பெரும்பான்மை 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய காலனித்துவ ஆட்சியாளர்களால் வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். ரீயூனியன் நாட்டு மக்கள் தொகையினரில் 20% வீதமானோர் தமிழர்கள் என அறியப்படுகின்றது.[2]. இவர்கள் தங்கள் மொழியை இழந்தாலும் பரம்பரையாக தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டுள்ளனர். மேலும், பாண்டிச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டவுடன், பிரான்சு அரசு பாண்டிச்சேரிவாழ் மக்களுக்கு பிரான்சு குடியுரிமை வழங்க முன்வந்தது. இதன் மூலம் 150 பாண்டிச்சேரித் தமிழ்க் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.
- கனபடி, வலியமா, மூடூசமி, விரபவுளி, சின்னப்பேன் என்னும் பெயர்கள் அதிகம் அறியப்படுகின்றன. இவை முறையே கணபதி, வள்ளியம்மா, முத்துச்சாமி, வீரபிள்ளை, சின்னப்பன் என்னும் தமிழ்ப் பெயர்களின் திரிபு.
தமிழ் மொழி சில பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழ்ச் சங்கம் ஒன்றும் இயங்குகிறது. தங்களுக்கு இந்தியக் குடியுரிமையும் இந்தியப் பண்பாட்டைப் பேண பல்கலைக்கழகமும் வேண்டும் எனக் கோரியுள்ளனர். பாண்டிச்சேரி, சென்னை நகரங்களை புனித ஆன்றீசு, புனித டெனிசு ஆகிய நகரங்களுடன் தொடர்பில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
- இழான் பவுல் வீரப்பிள்ளை, புனித ஆன்றீசின் தலைவரும் ரீயுனியன் தீவின் பொதுக் குழுவின் முதலாவது துணைத் தலைவர்.
- சாமினாதன் அக்செல் கிச்னன், ரீயூனியன் தீவின் பொதுக் குழுவின் இரண்டாவது துணைத் தலைவர்
- நடியா ராமசம்மி, ரீயூனியன் தீவின் பொதுக் குழுவின் மூன்றாவது துணைத் தலைவர்
- தெனிசு நீலமேயம், டேம்பன் தீவின் துணை ஆட்சியர்
காட்சியகம்
ரீயூனியன் தீவில் உள்ள தமிழ் இந்துக் கோயில்களின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- றியூனியன் தமிழர்களின் இணையதளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ரீயூனியனில் தைப்பொங்கல்