தென்னாபிரிக்கத் தமிழர்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(250,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
குவாசூலு-நட்டால் | |
மொழி(கள்) | |
ஆங்கிலம், தமிழ், ஆபிரிக்கான்ஸ் | |
சமயங்கள் | |
இந்து, கிறிஸ்தவம், ஏனையவை |
தென்னாபிரிக்கத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்ட தென் ஆபிரிக்கர்கள் ஆவார். இவர்களில் பெரும்பாலானவர்கள் 1860களில் காலனித்துவ பிரித்தானிய அரசால் வரவழைக்கப்பட்ட கூலித் தொழிலார்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களுக்கு தமிழ் பண்பாட்டையும் தமது சமயத்தையும் பேணுவது பல காலமாக நிறவெறி (Apartheid) அரசால் சிரமமாக இருந்தது. நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சியின் பின் இவர்கள் தமது தமிழ்ப் பின்புலத்தை மீட்டெடுத்து, தொடர்புகளை புதுப்பித்து வருகின்றார்கள்[சான்று தேவை].
தென் ஆபிரிக்கத் தமிழர்களின் தமிழீழப் போராளிகளுக்கான ஆதரவு குறிப்பிடத்தக்கது[சான்று தேவை].
அதிகம் வசிக்கும் இடங்கள்
- டர்பன் நகரம், குவாசூலு நட்டால் மாகாணம்
- சாட்ஸ்வொர்த், டர்பன்
- கௌடேங்
- மேற்கு முனை
தமிழ்க் கல்வி
தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளை அரசுப் பள்ளிகளில் கற்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 1994 ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் இவை கற்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அரசப் பாடத்திட்டத்தை பின்பற்றாத பள்ளிகளிலும் இந்த மொழிகள் கற்பிக்கப்பட்டன. தற்போது மீண்டும் அரசுப் பள்ளிகளில் அரசப் பாடத்திட்டத்துக்கு ஏற்ப கற்பிக்கப்படுகின்றன. குவாசூலு- நடல் பகுதியில் மட்டும் இந்த மொழிகளை பள்ளிகளில் கற்க முடியும். மூன்றாவது மொழிப் பாடமாக கற்க வழி ஏற்பட்டுள்ளது.[1][2]
அமைப்புகள்
- African Tamil Federation
- Dravidians for Peace and Justice
- Gauteng Tamil Federation
- Kwa-Zulu Natal Tamil Federation
இவர்தம் வாழ்வில் தமிழ்
சில தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. சன் டி.வி, கே டி.வி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ் பேசுவது அரிதாக காணப்பட்டாலும், சில தமிழ்ச் சொற்கள் பண்பாட்டின் மூலம் நிலைத்து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக, தண்ணீர் என்ற சொல் பேச்சுவழக்கில் மருவி, தண்ணி என்றாகும். தண்ணி என்ற பெயரில் சீட்டாட்டம் ஆடுவர் இங்குள்ள மக்கள். இந்து சமயத்தினர் திருவாசகம் போன்றவற்றைப் படித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இவற்றையும் பார்க்க
- பிரிட்டோரியா மாரியம்மன் கோயில்
- புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை
- சீசெல்சுத் தமிழர்
- ரீயூனியன் தமிழர்
- மொரிசியத் தமிழர்
ஆதாரங்கள்
- Bhana, Surendra (1984). A Documentary History of Indian South Africans.. Standford Hover Institution Press. பக். 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:08-179-8102-0. https://archive.org/details/documentaryhisto00bhan.
- ↑ தென்னாப்பிரிக்காவில் தமிழ்க் கல்வி
- ↑ "ஐந்து இந்திய மொழிகளில் கல்வி - குவாசூலு - நடல் கல்வி அமைச்சகம்" இம் மூலத்தில் இருந்து 2014-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140324155429/http://www.kzneducation.gov.za/Portals/0/Circuiars/General/2014/MERCURY%20(First%20Edition)%20-%20p.3%20-%2011%20Mar%202014.pdf.
வெளி இணைப்புகள்
- Tamil Federation of KwaZulu-Natal பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம்
- Gandhi-Luthuli documentary center
- The Diminished Use of Tamil in South Africa - (ஆங்கில மொழியில்)