நெதர்லாந்து தமிழர்
Jump to navigation
Jump to search
தமிழ்ப் பின்புலம் உடைய நெதர்லாந்து வாழ் மக்கள் நெதர்லாந்து தமிழர் எனப்படுகிறார்கள். இவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள். சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[1] இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.
1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழ்ப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து.