காங்கோத் தமிழர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கங்கோ தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் காங்கோ நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் தற்போது ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் அலுவல் நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள்[சான்று தேவை].சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்[சான்று தேவை]. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் காங்கோவில் வசித்து வருகிறார்கள்[சான்று தேவை]. தலைநகர் கின்ஷசாவில் மட்டுமே ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்[சான்று தேவை]. நாட்டின் முக்கிய நகரங்களான லுபம்பாஷி, கோமா மற்றும் கிசங்காணி போன்ற நகரங்களிலும் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். தலைநகர் கின்ஷாசாவில் காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம் என்ற மன்றமானது இங்கிருக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக செயற்பட்டு வருகிறது .

அமைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காங்கோத்_தமிழர்&oldid=26280" இருந்து மீள்விக்கப்பட்டது