ஹாரிஸ் ஜயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஹாரிஸ் ஜெயராஜ் |
பிற பெயர்கள் | தி மெலடி கிங் |
பிறப்பு | சனவரி 8, 1975 |
பிறப்பிடம் | கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | கிட்டார், விசைப்பலகை, பியானோ, தோல் இசைக்கருவிகள் |
இசைத்துறையில் | 2001–நடப்பு |
இளமை
சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] இவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.
பணிவாழ்வு
இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.
இசைக் கச்சேரி
2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக், ஹரிசரண், சின்மயி, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே (கிருஷ்ணகுமார் குன்னத்), பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார்.
இசையமைத்த திரைப்படங்கள்
• முதல் வெளியீடு | ♦ மீளுருவாக்கம் |
பாடலாசிரியராக
பாடல் | ஆண்டு | திரைப்படம் | பாடகர்கள் |
---|---|---|---|
குளு குளு வெண்பனி போல | 2010 | எங்கேயும் காதல் | அர்ஜுன் மேனன் |
வை வை வைபை | 2017 | சிங்கம் 3 | கார்த்திக், நிகிதா காந்தி, கிரிஸ்டோபர் ஸ்டான்லி |
விளம்பரப்படங்கள்
இவர் 2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விழிப்புணர்ச்சி விளம்பரப்படம் போன்று பல்வேறு விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் நடிகர்கள் ஹுரோவா? ஜீரோவா? எனும் விளம்பரப்படத்தில், தமிழ்த் திரைத்துறையின் முன்னனி நடிகர்களான விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா போன்றோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
- சிறப்பு விருதுகள்
- 2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
- 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம், தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதை, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் பெற்றார்[2].
- 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரிட்சு குழுமத்தின் மேசுட்ரோ விருதைப் பெற்றார்[3].
- இதர விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | வகை | வழங்கியவர் | முடிவு |
---|---|---|---|---|---|
2001 | மின்னலே | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Won |
2003 | சாமி | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated |
காக்க காக்க | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Won | |
சிறந்த இசையமைப்பாளர் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் | Won | |||
2005 | அந்நியன் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Won |
சிறந்த இசையமைப்பாளர் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் | Won | |||
கஜினி | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated | |
சிறந்த இசையமைப்பாளர் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் | Won | |||
2006 | வேட்டையாடு விளையாடு | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated |
2007 | உன்னாலே உன்னாலே | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated |
சிறந்த இசையமைப்பாளர் | விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Won | |||
சிறந்த இளமையான இசைத் தொகுப்பு | இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் | Won | |||
பெரும்பாலானோர் ரசித்த பாடல் (ஜுன் போனால்) |
Won | ||||
2008 | வாரணம் ஆயிரம் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Won |
சிறந்த இசையமைப்பாளர் | பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Won | |||
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (அவ என்னத் தேடி வந்த அஞ்சல) |
Won | ||||
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (முன்தினம் பார்த்தேனே) |
Nominated | ||||
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை) |
Nominated | ||||
ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பு | இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | Won | ||||
சிறந்த இசையமைப்பாளர் | சவுத் ஸ்கோப் விருதுகள் | Won | |||
தாம் தூம் | தமிழ் | ஆண்டின் சிறந்த காதல் பாடல் (அன்பே என் அன்பே) |
இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் | Won | |
2009 | அயன் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Won |
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (விழிமூடி யோசித்தால்) |
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Nominated | |||
இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் | Won | ||||
ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பு | மிர்ச்சி திரையிசை விருதுகள் | Won | |||
மிர்ச்சி நேயர்களின் சிறந்த இசைத்தொகுப்பு | Won | ||||
சிறந்த இசையமைப்பாளர் | எடிசன் விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | சவுத் ஸ்கோப் விருதுகள் | Won | |||
ஆதவன் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Won | |
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (ஹசிலி ஃபிசிலி) |
Nominated | ||||
சிறந்த இசையமைப்பாளர் | இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் | Won | |||
சிறந்த இசைத்தொகுப்பு | Won | ||||
2010 | ஆரஞ்சு | தெலுங்கு | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated |
சிறந்த இசைத்தொகுப்பு | மிர்ச்சி திரையிசை விருதுகள் | Won | |||
மிர்ச்சி நேயர்களின் சிறந்த இசைத்தொகுப்பு | Won | ||||
சிறந்த இசையமைப்பாளர் | பிக் பண்பலை விருதுகள் | Won | |||
2011 | எங்கேயும் காதல் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Nominated |
சிறந்த இசையமைப்பாளர் | விஜய் திரையிசை விருதுகள் | Won | |||
சிறந்த மேற்கத்திய பாடல் (நங்கை நிலாவின் தங்கை) |
Won | ||||
சிறந்த இசையமைப்பாளர் | பிக் தமிழ் மெல்லிசை விருதுகள் | Won | |||
சிறந்த இசைத்தொகுப்பு | Won | ||||
சிறந்த இசையமைப்பாளர் | எடிசன் விருதுகள் | Won | |||
கோ | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated | |
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (என்னமோ ஏதோ) |
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Won | |||
சிறந்த பின்னணி இசை | Won | ||||
புகழ்பெற்ற பாடலுக்கான விருது (என்னமோ ஏதோ) |
விஜய் திரையிசை விருதுகள் | Won | |||
ஆண்டின் சிறந்த பாடல் (என்னமோ ஏதோ) |
மிர்ச்சி திரையிசை விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | எடிசன் விருதுகள் | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | சென்னை டைம்ஸ் திரைப்பட விருதுகள் | Won | |||
ஏழாம் அறிவு | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated | |
ஃபோர்ஸ் | இந்தி | சிறந்த இசையமைப்பாளர் | ஸ்டார் டஸ்ட் விருதுகள் | Nominated | |
2012 | நண்பன் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Nominated |
சிறந்த இசையமைப்பாளர் | பிக் தமிழ் மெல்லிசை விருதுகள் | Nominated | |||
ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் | பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (வேணாம் மச்சான்) |
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Nominated | |
துப்பாக்கி | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) | Nominated | |
பெரும்பாலானோர் விரும்பிய பாடல் (கூகுள் கூகுள்) |
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | தென்னிந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகள் (தமிழ்) | Won | |||
சிறந்த இசையமைப்பாளர் | எடிசன் விருதுகள் | Nominated | |||
2015 | என்னை அறிந்தால் | தமிழ் | சிறந்த இசையமைப்பாளர் | தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (தமிழ்) | Nominated |
மேற்கோள்கள்
- ↑ A special birthday for Harris, 8 January 2008
- ↑ "ஹாரிஸ் ஜெயராஜை கெளரவப்படுத்திய கவர்னர்". இந்தியாக்ளிட்ஸ். 22 சனவரி 2015. http://www.indiaglitz.com/-3001--3006--2992--3008--3000--3021--2972--3014--2991--2992--3006--2972--3016--2965--3014--2995--2992--2997--2986--3021--2986--2975--3009--2980--3021--2980--3007--2991--2965--2997--2992--3021--2985--2992--3021--tamil-news-123704. பார்த்த நாள்: 22 சனவரி 2015.
- ↑ "ரிட்சு இசுடைல் விருதுகள் 2015". இந்தியாக்ளிட்ஸ். 4 பெப்ரவரி 2015. http://www.indiaglitz.com/channels/tamilfont/videos/57367.html. பார்த்த நாள்: 2 சூன் 2015.