ஜாவர் சீதாராமன்

ஜாவர் சீதாராமன் (Javar Seetharaman, பிறப்பு : 1919 இறப்பு : 1971) தமிழ்ப் புதின எழுத்தாளரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.

ஜாவர் சீதாராமன்
ஜாவர் சீதாராமன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஜாவர் சீதாராமன்
அறியப்படுவது எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேசன் ஐயர்–அபிராமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை நடேசன் ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.

திரைப்படத் துறையில்

1947 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் மாலினி என்னும் படத்தில் அறிமுகமானார். கே. ராம்நாத் இயக்கிய ஏழை படும் பாடு திரைப்படத்தில் "ஜாவர்" என்ற முரட்டுக் காவல்துறை அதிகாரி வேடத்தில் சீதாராமன் நடித்தார். அன்றில் இருந்து அவர் "ஜாவர்' சீதாராமன் எனப் பிரபலமானார்.

ஏவிஎம் தயாரித்த அந்த நாள் படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் காவல்துறை அதிகாரியாக ஜாவர் சீதாராமன் நடித்தார். தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு முதலிய படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். இவை பெரும் வெற்றியும் பெற்றன.

வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற கற்பனைக் கதையை உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது.

எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தும் கதை, வசனம் எழுதியுள்ளார்.

மேலும் நடிகைகள் வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, கே. ஆர். விஜயா, பாரதி, காஞ்சனா ஆகிய கதாநாயகிகளுடன் தந்தையாகவும் கௌரவ கதாபத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் 60களில் பிற்பகுதியில் நடித்த நடிகைகளான தேவிகா, கே. ஆர். விஜயா, சரோஜாதேவி ஆகிய நடிகைகளுடன் இறுதிவரை நண்பராகவும் அவர்கள் நடிப்பிற்க்கு பின் நின்று பல ஆலோசனைகள் கூறியுள்ளார்.

இதில் தனது தோழியான நடிகை சரோஜாதேவி அவர்கள் திருமணத்திற்கு பிறகு என் தம்பி படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் குண்டாக தொந்தியும், தொப்பைமாக இருந்ததால். அதை சரி செய்யும் விதமாக வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஷாட்பெல்ட் சரோஜாதேவி வயிற்றில் அணிந்து அழகான தோற்றத்தில் நடிக்க வைத்தார்.

எழுத்தாளராக

பிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் இவர் எழுதிய "மின்னல் மழை மோகினி', "உடல் பொருள் ஆனந்தி', "பணம் பெண் பாசம்', "நானே நான்" ஆகிய தொடர்கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தமிழ்ப்படங்களில் நடிகராக

உசாத்துணை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜாவர்_சீதாராமன்&oldid=5923" இருந்து மீள்விக்கப்பட்டது