சுரேஷ் அரசு
சுரேஷ் அரசு (Suresh Urs, சுரேஷ் அர்ஸ்) என்பவர் இந்திய திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 40 ஆவணப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் கிரீஷ் கர்னாட், மணிரத்னம், சங்கர் நாக், த. சீ. நாகாபரணா, கிரிஷ் காசரவள்ளி, பி. வாசு, பாலா, சரண், பரகூரு ராமசந்திரப்பா போன்ற இயக்குனர்களுடன் சேர்ந்து பிணியாற்றியதற்காக நன்கு அறியப்பட்டவர். பம்பாய் (1995) படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த திரைப்பட தொகுப்புக்காகன தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1] மேலும் இவர் ஐந்து கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும் பெற்றவர். மேலும் கர்நாடக மாநில ராஜ்யோத்சவ பிரசாஸ்தியை வென்றதற்காகவும் இவர் கௌரவிக்கப்பட்டார். வாழ்நாள் சாதனைக்காக கர்நாடக அரசின் விஷ்ணுவர்தன் விருதையும் 2014 இல் பெற்றார். மகான் கணக்கு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.
பிறப்பு | இந்தியா, கர்நாடகம், கொல்லேகல் |
---|---|
பணி | திரைப்பட படத் தொகுப்பாளர், நடிகர் |
உறவினர்கள் | சுந்தர் கிருஷ்ணா அரசு (சகோதரர்) |
விருதுகள் | சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய திரைப்பட விருது |
ஆரம்ப கால வாழ்க்கை
சுரேஷ் அரசு கர்நாடகத்தின், கொல்லேகல், எச். டி. கோட்டே தாலுகாவில், விவசாயியான கே சி சாமராஜே அரசு, தேவாஜம்மணி இணையருக்கு பிறந்தார். [2]
விருதுகள்
- தேசிய திரைப்பட விருதுகள்
- 1995: சிறந்த படத்தொகுப்பு : பம்பாய்
- கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்
- 2010-11: சிறந்த படத்தொகுப்பு : ஐதொந்துல ஐது
- 2007-08: சிறந்த படத்தொகுப்பு : சவி சவி நெனப்பு
- 1991-92: சிறந்த படத்தொகுப்பு : மைசூரு மல்லிகே
- 1989-90: சிறந்த படத்தொகுப்பு : பஞ்சம வேதம்
- 1980-81: சிறந்த படத்தொகுப்பு : மூறு தாரிகளு
பகுதி திரைப்படவியல்
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1983 | பேங்கர் மர்கயா | கன்னடம் | |
1986 | மால்குடி டேஸ் | இந்தி | தொலைக்காட்டித் தொடர் |
1987 | ஈ பந்தா அனுபந்தா | கன்னடம் | |
1988 | ஆஸ்போட்டா | கன்னடம் | |
1989 | இது சத்யா | கன்னடம் | |
1989 | ராமணுஜாச்சார்யா | தமிழ் | |
1990 | பஞ்சம வேதா | கன்னடம் | சிறந்த படத்தொகுப்பாளருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது |
1990 | கணேசா மதுவே | கன்னடம் | |
1991 | கௌரி கணேசா | கன்னடம் | |
1991 | தளபதி | தமிழ் | |
1992 | சைத்ரத பிரேமாஞ்சலி | கன்னடம் | |
1992 | மைசூர் மல்லிகே | கன்னடம் | சிறந்த படத்தொகுப்பாளருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது |
1992 | செலுவி | கன்னடம் | |
1992 | ரோஜா | தமிழ் | |
1993 | பா நல்லி மதுசந்திரக்கே | கன்னடம் | |
1993 | திருடா திருடா | தமிழ் | சிறந்த படத்தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது |
1995 | பம்பாய் | தமிழ் | சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது |
1996 | கல்கி | தமிழ் | |
1997 | ஆஹா..! | தமிழ் | |
1997 | தேவதை | தமிழ் | |
1997 | மின்சார கனவு | தமிழ் | |
1997 | இருவர் | தமிழ் | |
1998 | பூமி தாயிய சொச்சாசல மகா | கன்னடம் | |
1998 | தில் சே | இந்தி | |
1998 | பூவேலி | தமிழ் | |
1999 | அமர்க்களம் | தமிழ் | |
1999 | ரோஜாவனம் | தமிழ் | |
1999 | சங்கமம் | தமிழ் | |
1999 | உன்னருகே நானிருந்தால் | தமிழ் | |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | தமிழ் | |
2000 | முகவரி | தமிழ் | |
2000 | பார்த்தேன் ரசித்தேன் | தமிழ் | |
2001 | அல்லி அர்ஜுனா | தமிழ் | |
2001 | தீனா | தமிழ் | |
2001 | நந்தா | தமிழ் | |
2001 | மின்னலே | தமிழ் | |
2001 | பார்த்தாலே பரவசம் | தமிழ் | |
2002 | ஜெமினி | தமிழ் | |
2002 | மௌனம் பேசியதே | தமிழ் | |
2002 | ஊருக்கு நூறு பேர் | தமிழ் | |
2002 | உருமாற்றம் | தமிழ் | |
2002 | ரமணா | தமிழ் | |
2002 | துள்ளுவதோ இளமை | தமிழ் | |
2002 | விரும்புகிறேன் | தமிழ் | |
2003 | ஆஹா எத்தனை அழகு | தமிழ் | |
2003 | பீஷ்மர் | தமிழ் | |
2003 | இரண்டு | தமிழ் | |
2003 | ஜே ஜே | தமிழ் | |
2003 | காதல் சடுகுடு | தமிழ் | |
2003 | பிதாமகன் | தமிழ் | |
2003 | சூரி | தமிழ் | |
2003 | தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆப் ஸ்பை | இந்தி | |
2003 | திருமலை | தமிழ் | |
2004 | அட்டகாசம் | தமிழ் | |
2004 | ரைட்டா தப்பா | தமிழ் | |
2004 | சாந்தி | கன்னடம் | |
2004 | சுள்ளான் | தமிழ் | |
2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | தமிழ் | |
2004 | விஷ்வதுளசி | தமிழ் | |
2005 | சந்திரமுகி | தமிழ் | |
2005 | நா உசிரி | தெலுங்கு | |
2005 | பிப்பிரவரி 14 | தமிழ் | |
2005 | மாயாவி | தமிழ் | |
2005 | சுக்ரன் | தமிழ் | |
2006 | ஆதி | தமிழ் | |
2006 | இதயத்திருடன் | தமிழ் | |
2006 | ஜாம்பவான் | தமிழ் | |
2006 | குருட்சேத்திரம் | தமிழ் | |
2006 | பரமசிவன் | தமிழ் | |
2006 | சிவப்பதிகாரம் | தமிழ் | |
2007 | முனி | தமிழ் | |
2007 | சவி சவி நெனப்பு | கன்னடம் | |
2008 | காலிபட்டா | கன்னடம் | |
2008 | மூகின மனசு | கன்னடம் | |
2008 | பாண்டி | தமிழ் | |
2008 | சங்கமா | கன்னடம் | |
2009 | நான் கடவுள் | தமிழ் | |
2009 | மாயாண்டி குடும்பத்தார் | தமிழ் | |
2009 | சிரித்தால் ரசிப்பேன் | தமிழ் | |
2009 | அந்தோணி யார்? | தமிழ் | |
2010 | ஆப்தரக்ஷகா | கன்னடம் | |
2010 | பாணா காத்தாடி | தமிழ் | |
2010 | நாயகா | கன்னடம் | |
2011 | அவன் இவன் | தமிழ் | |
2011 | கிரீடம் | தெலுங்கு | |
2011 | சதுரங்கம் | தமிழ் | |
2011 | தம்பி வெட்டோத்தி சுந்தரம் | தமிழ் | |
2011 | உஜ்வாது | கொங்கணி | |
2012 | பில்லா 2 | தமிழ் | |
2012 | உள்ளம் | தமிழ் | |
2013 | இசக்கி | தமிழ் | |
2014 | நினைவில் நின்றவள் | தமிழ் | |
2014 | வன்மம் | தமிழ் | |
2014 | அங்குலிமலா | கன்னடம் | |
2015 | புலன் விசாரணை 2 | தமிழ் | |
2015 | மகா மகா | தமிழ் | |
2015 | சதுரம் | தமிழ் | |
2015 | ஆக்டோபஸ் | கன்னடம் | |
2016 | சிவலிங்கா | கன்னடம் | |
2016 | அர்த்தநாரி | தமிழ் | |
2016 | நீர் தோசா | கன்னடம் | |
2016 | நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க | தமிழ் | |
2016 | நுண்ணுணர்வு | தமிழ் | |
2016 | கர்ம தோசா | Telugu | |
2017 | சிவலிங்கா | தமிழ் | |
2017 | ஐயங்கார் வீதி | தமிழ் | |
2018 | பரோல் | மலையாளம் | |
2018 | குமார சம்பவம் | மலையாளம் | |
2018 | கன்னக்கோல் | தமிழ் | |
2019 | காதல் முன்னேற்றக் கழகம் | தமிழ் | |
2020 | பச்சை விளக்கு | தமிழ் |
குறிப்புகள்
- ↑ "43rd National Film Awards (India)". Directorate of Film Festivals. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 12 September 2013.
- ↑ "Suresh Urs: Working with Mani Ratnam was great". Deccan Herald. 2 May 2020.