நுண்ணுணர்வு
நுண்ணுணர்வு (2016 ) | |
---|---|
இயக்கம் | மதிவாணன் சக்திவேல் |
தயாரிப்பு | சக்தி ஸ்க்ரீன்ஸ் |
கதை | மதிவாணன் சக்திவேல் |
திரைக்கதை | மதிவாணன் சக்திவேல் |
இசை | மாயு கணேசன், ராஜ் |
நடிப்பு | மதிவாணன் சக்திவேல், இந்திரா |
ஒளிப்பதிவு | தினேஷ் , பிரசாத் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 30 செப்டம்பர் 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நுண்ணுணர்வு (Nunnunarvu) 2016இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் மதிவாணன் சக்திவேல் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் ,[1] அவருடன் இந்திரா நடித்துள்ளார். இசை மாயு கணேசன் இவருடன் பின்னணி இசை ராஜ் படத்தொகுப்பு, சுரேஷ் அர்ஸ் மேற்கொண்டுள்ளனர் .[2][3] 2016 செப்டம்பர் 30 அன்று வெளிவந்தது.[4][5][6][7][8]
கதைச் சுருக்கம்
சந்துரு (மதிவாணன் சக்திவேல்) தனது பல் மருத்துவத் தேர்விற்காக ஆஸ்திரேலியா செல்கிறார்.[1] அங்கே சாரு , நுண்ணுணர்வு முறையை கற்று வருகிறார். தான் கற்ற வித்தையை சந்துருவிடம் செய்து காட்டிய சாரு பின்னர் அவரைக் காதலிக்கிறார்.. இருவரின் உணர்வுகளும் அவரவர் காதுகள் மூலம் கேட்க முடிகிறது. அவர்களால் கண்ணாடி மூலமாகவும் பார்க்க முடிகிறது. நட்பில் ஆரம்பித்த அவர்கள் உறவு காதலில் முடிகிறது[9][10][11] சந்துருவின் நண்பன் வினீஷ் ஒரு பெண்ணை கொலை செய்தது , சந்துருவிற்குத் தெரியவர வினீஷ் அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். சாருவின் குடும்ப நண்பர் பிரசாத்திற்கு சாருவின் மேல் ஆசை உண்டாகின்றது, சந்துருவும், சாருவும் நுண்ணுணர்வு மூலம் எவ்வாறு தங்கள் பிரச்சனையை சரி செய்கிறார்கள் என்பது மீதிக்கதை.[12][13]
நடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.[14] இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும்பான்மையினருக்கு இது முதல் படமாகும்.[9][10][11][15][16]
தயாரிப்பு
சக்தி ஸ்க்ரீன்ஸ் சார்பில் மதிவாணன் சக்திவேல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.[10][11][17] இப்படத்தின் முன்னோட்டம் ஏபி இண்டல்நேஷனல் மூலம் 2016 ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டது[18][19]
இசை
ஐந்து பாடல்கள் கொண்ட இதன் இசையை மாயு கணேசன் மேற்கொண்டுள்ளார்.[20] பாடல்களை மதிவாணன் சக்திவேல் எழுதியுள்ளார்.[21] பின்னணி இசை ராஜ்.[17][22]
இப்படத்தின் ஒலித்தொகுப்பு ஏபி இண்டல்நேஷனல் மூலம் 2016 சூலை 29 அன்று வெளியிடப்பட்டது.[21]
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "பேசிக்கவா" | சத்யன் சிவநாதன், ஐஸ்வர்யா | 5:08 | |||||||
2. | "மஞ்சள் மாலை" | சத்யன் சிவநாதன், ஷாலினி ஹரிகேஷ் | 3:56 | |||||||
3. | "எங்கிருந்தோ இசை" | கிரிஷா கணேஷ்ராஜா, நிவேதிதா ரோஷ்நாத் | 2:51 | |||||||
4. | "வீக் என்டுள" | கோபி ஐயர் ,ரஷ் | 4:00 | |||||||
5. | "பின்னணி இசை" | ராஜ் | 4:33 | |||||||
மொத்த நீளம்: |
20:29 |
வெளியீடு
2016 செப்டம்பர் 30 அன்று வெளிவந்த.[23][24] ஆஸ்திரேலியாவில் 2016 அக்டோபர் 1 அன்றும் இங்கிலாந்தில் அக்டோபர் 2 அன்றும் வெளிவந்தது.[5][25][26]
விருது
2019 பெப்ரவரி 20 அன்று மும்பையில் நடைபெற்ற, 2019 ஆம் ஆண்டுக்கான தாதாசாஹேப் பால்கே இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு "நுண்ணுணர்வு" தேர்ந்தெடுக்கப்பட்டது. [27]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 https://www.imdb.com/name/nm5844896/
- ↑ "முழுக்க முழுக்க ஆஸ்த்ரேலியாவில் உருவான நுண்ணுணர்வு! | Kalakkalcinema". tamilnews.kalakkalcinema.com. Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ https://www.youtube.com/watch?v=gW1Kei-cXQw
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-07. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ 5.0 5.1 http://villagecinemas.com.au/movies/nunnunarvu
- ↑ https://www.eventcinemas.com.au/Movie/Nunnunarvu
- ↑ http://www.india2australia.com/nunnunarvu-tamil-movie-screening-details-for-melbourne/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ 9.0 9.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ 10.0 10.1 10.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ 11.0 11.1 11.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ http://www.tamilcinetalk.com/nunnunarvu-movie-reviews/
- ↑ http://www.cinemapluz.com/nunnuir-movie-review/
- ↑ "Dinamalar". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "ஆஸ்திரேலியாவில் தயாரான தமிழ்படம் - Tamils24". tamils24.com. Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ 17.0 17.1 "ஆஸ்திரேலியாவில் தயாரான தமிழ்படம் நுண்ணுணர்வு - Nununarvu - நுண்ணுணர்வு | Tamilstar.com |". tamilstar.com. Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ https://www.youtube.com/watch?v=wnluqJYEdtc
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ "Dinamalar". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ 21.0 21.1 https://www.youtube.com/playlist?list=PL6eYJImIZdQ6qnAEjR-zCKK89PQdH2W18
- ↑ https://play.spotify.com/album/75vIhllpT5URfyDZe1mRVa?play=true
- ↑ https://in.bookmyshow.com/chennai/movies/nunnunarvu/ET00046902
- ↑ http://spicyonion.com/movie/nunnunarvu/
- ↑ http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/nunnunarvu-tamil-movie-thriller
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
- ↑ https://www.dpiff.in/