மகா மகா
மகா மகா | |
---|---|
இயக்கம் | மதிவாணன் சக்திவேல் |
தயாரிப்பு | சக்தி ஸ்கிரீன்ஸ் |
கதை | மதிவாணன் சக்திவேல் |
திரைக்கதை | மதிவாணன் சக்திவேல் |
இசை | பாவலர் சிவா |
நடிப்பு | மதிவாணன் சக்திவேல் மெலிசா இந்திரா நிழல்கள் ரவி அனுபமா குமார் மீரா கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 6, 2015 |
ஓட்டம் | 109 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகா மகா 2015 ஆம் ஆண்டு மதிவாணன் சக்திவேல் இயக்கத்தில், பாவலர் சிவா இசையில், மதிவாணன் சக்திவேல், மெலிசா, இந்திரா, நிழல்கள் ரவி, அனுபமா குமார் மற்றும் மீரா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1]
இப்படம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நடிகர்களைக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டில் படமாக்கப்பட்டது.[2] 2015 மார்ச்சு 6 ஆம் நாள் தமிழ்நாடு, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வெளியானது.[3][4]
கதைச்சுருக்கம்
விஜய் (மதிவாணன்) ஆஸ்திரேலியாவில் பணிசெய்யச் செல்கிறார். அங்கு எமிலி (மெலிசா) என்ற ஆஸ்திரேலியா நாட்டுப் பெண்னைச் சந்திக்கிறார். அவள் மீது காதல் கொள்கிறார். அதே சமயம் எமிலியைக் கடந்த பத்து தினங்களாகக் காணவில்லையென அந்நாட்டுக் காவல்துறை தேடிவருகிறது. விஜயின் வீட்டுத் தோட்டத்தில் எமிலியின் இறந்து புதைக்கப்பட்ட உடல் கிடைக்கிறது. விஜய் கைது செய்யப்படுகிறான். பிரேதப் பரிசோதனை அறிக்கை எமிலி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறது. எமிலி இறந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாள்தான் விஜய் ஆஸ்திரேலியா வந்திருக்கிறான். அப்படி என்றால் விஜய் அந்தக் கொலையை எப்படி செய்திருக்க முடியும் என்று காவல் துறை அதிர்ச்சியடைகிறது.எனவே விஜய் குற்றவாளி இல்லை என்று விடுதலையாகிறான். விடுதலையானாலும் இறந்துபோன பெண்ணைத் தான் எப்படி சந்தித்திருக்க முடியும் என்று விஜய்க்கு குழப்பம் ஏற்படுகிறது. அவள் எப்படி இறந்தாள்? அவளைக் கொன்றது யார்? என்ற தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிப் புலனாய்வு செய்யத் தொடங்கும் விஜய் உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடித்தானா? என்பது மீதிக்கதை.
வெளியீடு
2015 மார்ச்சு 6 ஆம் நாள் தமிழ்நாடு, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வெளியானது.[5] படத்தின் முன்னோட்டம் 2015 பெப்ரவரி 11 அன்று ஏ.பி. இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தயாரிப்பு
சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் மதிவாணன் சக்திவேல் இப்படத்தி எழுதி, இயக்கி, நடித்தார்.[6] இப்படம் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள டரல்கா என்ற நகரில் படமாக்கப்பட்டது.[7]
இசை
இப்படத்தின் இசையமைப்பாளர் பாவலர் சிவா. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜனின் மைந்தன்.[8]
இப்படத்தின் பாடல்களை இளையராஜா வெளியிட்டார்.[9][10] இப்படத்தின் பாடல்கள் இனிமையாக உள்ளதாக குறிப்பிட்ட இளையராஜா, படத்தின் தலைப்பான "மகா மகா" பொருத்தமாக இருப்பதாகக் கூறினார்.[11]
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | என்னவோ | பிரசாந்தினி, பிரசன்னா | 5:31 |
2 | அகரமோடு | பிரசாந்தினி, வல்லா | 5:04 |
3 | மகா மகா (தீம்) | பாவலர் சிவா | 2:19 |
விருதுகள்
- 2015 ஜூலையில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நடந்த "தி இண்டிபெஸ்ட் பிலிம் அவார்ட்ஸ்" விழாவில் "அங்கீகார விருது" பெற்றது.
- 2015 ஆகத்தில் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் நடந்த "அக்கோலட் குளோபல் பிலிம் காம்பெடிஷன்" விழாவில் "அங்கீகார விருது" பெற்றது.[12][13][14][15]
மேற்கோள்கள்
- ↑ "மகா மகா".
- ↑ "ஆஸ்திரேலியா". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
- ↑ "மகா மகா". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
- ↑ "மகா மகா".
- ↑ "படத்தயாரிப்பு".
- ↑ "இயக்குனர்".
- ↑ "படப்பிடிப்பு".
- ↑ "இசை".
- ↑ "இசை வெளியீடு". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "இசை வெளியீடு". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
- ↑ "இசை வெளியீடு". Archived from the original on 2016-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
- ↑ "விருது".
- ↑ "விருது".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "விருது". Archived from the original on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
- ↑ "விருது".