சமஸ்தானம் (திரைப்படம்)

சமஸ்தானம் (Samasthanam) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். ராஜ் கபூர் இயக்கிய இந்த படத்தில் ஆர். சரத்குமார் இரட்டை வேடங்களிலும், சுரேஷ் கோபி, தேவயானி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். எம். கஜாமைதீன், கே. ஆயிஷாவாஸ் ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு தேவா இசையமைத்தார். இப்படம் 2002 செப்டம்பர் 27 அன்று வெளியானது.

சமஸ்தானம்
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புஎம். காஜாமைதீன்
கே. ஆயிஷா
கதைராஜ் கபூர்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. பாலமுருகன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்இராஜா கம்பைன்ஸ்
வெளியீடு27 செப்டம்பர் 2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரு ( ஆர். சரத்குமார் ), சூர்யா ( சுரேஷ் கோபி ) ஆகியோர் பிரிக்க முடியாத நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததால் திரு சூர்யாவுக்கு ஒரு மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களின் இந்த நெருங்கிய நட்பானது நண்பர்களாக இருந்த அவர்களின் தாத்தா மற்றும் தந்தையரிடமிருந்து வழிவழியாக வந்தது. சங்கரா ( ஆஷிஷ் வித்யார்த்தி ) நண்பர்கள் மீதான வண்மத்தின் காரணமாக அவர்களை பிரிக்க விரும்பி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். கடைசியில் சங்கராவின் சதிகளை உணர்ந்து சங்கராவை ஒழித்து நண்பர்கள் மீண்டும் ஒன்றிணைகின்றனர்.

நடிப்பு

இசை

இப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றைதிரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். 2002 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவ்வில், பா. விஜய் மற்றும் நா. முத்துக்குமார் எழுதிய 6 பாடல்கள் இருந்தன.[1][2][3][4]

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 "ஸ்டெல்லா மேரிஸ்" சிம்பு பா. விஜய் 5:38
2 "ஒரு குறிஞ்சிப் பூ" கிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, ஸ்ரீனிவாஸ் 6:16
3 "பெண்ணே பெண்ணே" பி. உன்னிகிருஷ்ணன், திப்பு, ஹரிணி , கங்கா நா. முத்துக்குமார் 6:23
4 "ஈஸ்வரா ஈஸ்வரா" திப்பு, கார்த்திக் பா.விஜய் 5:46
5 "கொத்தமல்லி" சிம்பு, சுஜாதா 6:10
6 "மலரை மலரை" பி. உன்னிகிருஷ்ணன் 2:12

வரவேற்பு

தி இந்து எழுதிய விமர்சனத்தில் "நீண்ட முன்கதைகள் மற்றும் தேவையற்ற பாடல் காட்சிகள் சமஸ்தானத்தின் வேகத்தை குறைக்கிறது. கதை வலுவானது, என்றாலும் திரைக்கதையில் நெகிழ்வு தன்மை இல்லை ".[5] சிஃபி எழுதிய விமர்சனத்தில், "படத்தின் இயக்குனர் ராஜ் கபூரால் புதிதாக எதையும் சொல்ல முடியவில்லை." [6]

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=சமஸ்தானம்_(திரைப்படம்)&oldid=33104" இருந்து மீள்விக்கப்பட்டது