என் உயிரினும் மேலான
என் உயிரினும் மேலான (En Uyirinum Melana) என்பது 2007ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். கே. ஆர். ஜெயா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் அஜித் சந்தர், ராதிகா மேனன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரஞ்சித், இரவிக்குமார், கருணாஸ், காகா இராதாகிருஷ்ணன், சாருஹாசன், பாத்திமா பாபு, கமலா காமேஷ் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்தார். படம் 2007 ஆகத்து 10 அன்று வெளியானது.[1][2]
என் உயிரினும் மேலான | |
---|---|
இயக்கம் | கே. ஆர். ஜெயா |
தயாரிப்பு | என். திருமுருகன் வாசு எஸ். அசோக்குமார் |
கதை | கே. ஆர். ஜெயா பாலகுமாரன் (உரையாடல்) |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் சந்தர் இராதிகா மேனன் |
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
படத்தொகுப்பு | பி. சி. மோகன் |
கலையகம் | என்.என்.டி. மூவி கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஆகத்து 10, 2007 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அஜித் சந்திரா ஜீவாவாக
- இராதிகா மேனன் பிரியாவாக
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜீவாவின் தந்தை விஜயரங்கமாக
- ரஞ்சித் விவக்ரமாக (சிறப்புத் தோற்றத்தில்)
- இரவிக்குமார் பிரியாவின் தந்தையாக
- கருணாஸ் ஜானியாக
- காகா இராதாகிருஷ்ணன் ஜீவாவின் தாத்தாவாக
- சாருஹாசன் சத்தியநாத சுவாமியாக
- பாத்திமா பாபு ஜீவாவின் தாய் காமாட்சியாக
- கமலா காமேஷ் பிரியாவின் பாட்டியாக
- லொள்ளு சபா பாலாஜி ஜீவாவின் நண்பராக
- மாஸ்டர் ஆண்ரு பிரியாவின் தம்பியாக
- பாண்டு எம். பி. இராமலிங்கமாக
- செம்பிலி ஜெகன் சட்டமன்ற உறுப்பினர் கழந்தை தமிழரசனாக
- பயில்வான் ரங்கநாதன் காவல் ஆய்வாளர் முனுசாமியாக
- சாப்லின் பாலு வேலையாளாக
- சிங்கமுத்து சிங்கமாக
- போண்டா மணி
- நெல்லை சிவா
- தாடி பாலாஜி பரமசிவமாக
- வி. எம். சுப்புராஜ் சுப்புராஜாக
- சிவநாராயணமூர்த்தி
- தேனி முருகன்
- விஜய் கணேஷ்
- மாயி சுந்தர்
- விசாலினி
- பரிமளா
- மாஸ்டர் சூர்யா
- கனல் கண்ணன் (காக்க காக்க பாடலில் சிறப்புத் தோற்றத்தில்)
தயாரிப்பு
உயிரிலே கலந்தது (2000) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே. ஆர். ஜெயா என். என். டி. மூவி கிரியேஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட என் உயிரினும் மேலான படத்தின் வழியாக மீண்டும் இயக்குநராக வந்தார். இடையில் ஜூன் ஜூலை என்ற பெயர் கொண்ட வெளிவராத படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றினார்.[3] படத்தில் நாயகனாக சென்னையைச் சேர்ந்த புதுமுகமான பொறியாளர் அஜித் சந்தர் நடித்தார். மும்பையைச் சேர்ந்த ராதிகா மேனன் நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தந்தை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை கனல் கனல் கண்ணன் அமைத்து, ஒரு ரவுடியாக நடித்ததுமல்லாமல், ஒரு கானா பாடலையும் பாடினார். தேவா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் படத்தின் சூழ்நிலை சார்ந்தவையே என்றார் இயக்குனர். ஆர். செல்வா ஒளிப்பதிவு செய்ய, பி. சி. மோகனன் படத்தொகுப்பு செய்ய, கிரண் கலை இயக்குநராக பணியாற்றினார்.[4][5]
இசை
பிரைப்பட பின்ண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். வாலி, சினேகன் முத்து விஜயன் ஆகியோர் ஏழு பாடல்களை எழுதியுள்ளனர்.[6][7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மயிலாபூரு ராணி" | ரஞ்சித், கிரேஸ் கருணாஸ் | 4:11 | |||||||
2. | "பச்சைப் புடவை" | சாதனா சர்கம் | 6:31 | |||||||
3. | "ஏய் வாலிபப் பயலே" | அனுராதா ஸ்ரீராம் | 5:43 | |||||||
4. | "ஒரு நிமிடம் போரு" | எம். ஜி. ஸ்ரீகுமார், ஹரிணி | 5:52 | |||||||
5. | "வள்ளி வள்ளி காதல் வள்ளி (இருவர்)" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | 5:34 | |||||||
6. | "காக்க காக்க" | தேவா | 4:47 | |||||||
7. | "வள்ளி வள்ளி காதல் வள்ளி (தனியாக)" | சுஜாதா மோகன் | 0:52 | |||||||
மொத்த நீளம்: |
33:30 |
வரவேற்பு
ஒரு விமர்சகர் படத்தை எதிர்மறையாக விமர்சித்தார், மேலும் அவர் படத்தின் மோசமான கதை, பலவீனமான திரைக்கதையை விமர்சித்தார்.[8]
மேற்கோள்கள்
- ↑ "Jointscene : Tamil Movie En Uyirinum Melaana". jointscene.com இம் மூலத்தில் இருந்து 1 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100201151758/http://www.jointscene.com/movies/Kollywood/En_Uyirinum_Melaana/1713.
- ↑ "En Uyirinum Melaana (2007)". filmibeat.com. https://www.filmibeat.com/tamil/movies/en-uyirnum-melana.html.
- ↑ https://web.archive.org/web/20050306214553/http://www.dinakaran.com/cinema/english/gossip/2002/09-02-02.html
- ↑ "En Uyirinum Melana". chennaionline.com இம் மூலத்தில் இருந்து 27 June 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060720155954/http://chennaionline.com/film/Onlocation/2006/06eum.asp.
- ↑ "Thank God its Friday". behindwoods.com. 25 October 2006. http://www.behindwoods.com/features/News/News35/25-10-05e/tamil-movies-news-spbala.html.
- ↑ "En Uyirinum Melaana (2007) - Deva". mio.to இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220316093907/https://mio.to/album/En+Uyirinum+Melaana+(2006).
- ↑ "En Uyirinum Melaana Songs". mymazaa.com. https://mymazaa.com/tamil/audiosongs/movie/En+Uyirinum+Melaana.html.
- ↑ "என் உயிரினும் மேலான" (in Tamil). koodal.com இம் மூலத்தில் இருந்து 2 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100202190853/http://koodal.com/tamil/movies/reviews/322/en-uyirinum-melana.