தத்துவராயர்
Jump to navigation
Jump to search
தத்துவராயர் (Tattuvarayar) என்பவர் கிபி 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்.
வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்ட முதல் ஆசிரியர்.[1]
இவர் தன் ஆசிரியர் சொரூபானந்தர் உதவியுடன் 18 நூல்களைத் தமிழில் பாடினார்.
அவற்றை 'அடங்கன்முறை' (அடங்கல் முறை) என குறிப்பிடுகின்றனர்.
அடங்கல்முறை நூல்கல்களை
- கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்றும்,
- உலகியல் வாழ்க்கைக்கு உதவாதவை என்றும்
இவரது ஆசிரியர் சொரூபானந்தர் கருதினார்.
நூல்கள்
தத்துவராயர் நூல்கள் என இங்கு 26 நூல்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில்
- அடங்கல்முறை என்று குறிப்பிடப்படும் தொகுப்பு நூல்கள் எண் 3 முதல் 20 வரை எண்ணிடப்பட்டுள்ள 18 நூல்கள்
- ஆசிரியருக்கு அடங்கி நடந்த முறைமையைக் கூறுவதால் பெற்ற பெயர்.
- எண் 22-ல் குறிப்பிடப்பட்டுள்ள நூல் தத்துவராயர் பயன்படுத்திக்கொண்ட நூல்.
பட்டியல்
எண் | நூலின் பெயர் | நூலின் மறுபெயர் (உள்ளடக்கப் பெயர்) |
---|---|---|
1 | சிவப்பிரகாச வெண்பா | குருவின் குரு சிவப்பிரகாசருக்கு வணக்கம் |
2 | தத்துவாமிர்தம் | குருவைத் தேடியது |
3 | திருத்தாலாட்டு | தத்துவப் பிரகாசம் |
4 | பிள்ளைத் திருநாமம் (பிள்ளைத்தமிழ்) | தத்துவ நிலையம் |
5 | வெண்பா அந்தாதி | தத்துவ விளக்கம் |
6 | கலித்துறை அந்தாதி | தத்துவ சாரம் |
7 | சின்னப்பூ வெண்பா | தத்துவ சரிதை |
8 | தசாங்கம் | தத்துவ போதம் |
9 | இரட்டைமணி மாலை | தத்துவ தீபம் |
10 | மும்மணிக்கோவை | தத்துவ ரூபம் |
11 | நான்மணி மாலை | தத்துவ அனுபவம் |
12 | கலிப்பா | தத்துவ சித்தி |
13 | ஞானவினோதன் கலம்பகம் | தத்துவ ஞானம் |
14 | உலா | தத்துவ காமியம் |
15 | சிலேடை உலா | தத்துவ வாக்கியம் |
16 | நெஞ்சுவிடு தூது | தத்துவ நிச்சயம் |
17 | கலிமடல் | தத்துவத் துணிவு |
18 | அஞ்ஞவதைப் பரணி | தத்துவக் காட்சி |
19 | மோகவதைப் பரணி | இதன் மறுபெயர் ஏடுகளில் விடுபட்டுள்ளது |
20 | அமிர்த சாரம் | தத்துவ தரிசனம் |
21 | பாடுதுறை | (தத்துவராயர், சொரூபானந்தர் பிரிந்து கூடுதல் |
22 | ஈசுர கீதை | சிவப்பிரகாசர் சித்தி (வடமொழிநூல் தமிழில் மொழிபெயர்ப்பு) |
23 | பிரம கீதை | சொரூபானந்தர் சித்தி |
24 | சசிவன்ன போதம் | மோகவதைப் பரணி நூலின் தனிப்பகுதி |
25 | பெருந்திரட்டு | சிவப்பிரகாசம், (சிவப்பிரகாசர் திரட்டியது) |
26 | குறுந்திரட்டு | சிவப்பிரகாசத்திலிருந்து தத்துவராயர் திரட்டியது |
இவர் வேதாந்தி. தம் வேதாந்தக் கொள்கைகளை நிறுவுவதற்காகத் தேவாரப்பாடல்களைத் தன் கோணத்திற்கேற்பத் திரட்டி வெளியிட்டார். அவரது தேவாரத் திரட்டு இரண்டு நூல்களாக உள்ளன.
என்பன அவை.
இவற்றையும் காண்க
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ பிரமம் என்பது வேதத்தின் மூலப் பொருள். இந்த வேதக் கொள்கைகளைப் பாடவந்த தத்துவராயர் தன்னை அறியாமல் தன் சூழல் தாக்கத்தால் சைவ, வைணவச் செய்திகளை அரவணைத்துக்கொள்கிறார்.