பெருந்திரட்டு
Jump to navigation
Jump to search
பெருந்திரட்டு என்பது தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். [1]
- குறுந்திரட்டு
என்னும் இரண்டு நூல்கள் ஆசியர் சொரூபானந்தரின் ஆணைப்படி இவரால் திரட்டி உருவாக்கப்பட்டவை.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு
பெருந்திரட்டு நூலமைதி
- தொகுத்த தத்துவராயர் தன் ஆசிரியரின் ஆசிரியர் பெயரால் திரட்டிச் ‘சிவப்பிரகாசர் பெருந்திரட்டு’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
- நூலிலுள்ள பாடல்கள் – பாயிரம் 12, நூல் 2821, ஆக 2833 பாடல்கள்
நூல் சொல்லும் செய்திகள்
- உலகாயதம் முதல் வேதாந்தம் ஈறாக உள்ள மதக் கோட்பாடுகளும், கண்டனமும்
- ஞான சாதனங்கள்
- யோக முறைமைகள்
- குருவின் அருமை பெருமைகள்
பெருந்திரட்டு மேற்கோள் நூல்கள்
பெருந்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள முன்னோர் நூல்கள்
|
|
|
முதலானவை
- இவருக்கு முன் தமிழில் வேதாந்த நூல்
- பரமார்த்த தரிசனம் (பட்டர் மொழிபெயர்த்த பகவத் கீதை)
- இவருக்குப் பின் தமிழில் வேதாந்த நூல்
- கைவல்ய நவநீதம்
- ஞானவாசிட்டம்
சில செய்திகள்
- புதிய பாடல்களுக்குப் பழநூல் பெயர்களைச் சார்த்தியுள்ளார்.
- கொள்கை மறுப்புப் பாடல்கள் இணைந்து வருகின்றன.
- தேவாரத்துக்குப் பெயர் சூட்டியது
- திருக்கடைக்காப்பு (சம்பந்தர் தேவாரம்)
- தேவாரம் (அப்பர் தேவாரம்)
- திருப்பாட்டு (சுந்தரர் தேவாரம்)
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ பெருந்திரட்டு 1912-ல் இந்த நூலைக் கோ. வடிவேல் செட்டியாரும், மங்கலம் சண்முக முதலியாரும் ஆய்வு செய்து பதிப்பித்துள்ளனர்.