சொரூபானந்தர்
Jump to navigation
Jump to search
சொரூபானந்தர் அல்லது சொரூபானந்த தேசிகர் (Svarupananda Desikar) என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ வேதாந்தி.
தத்துவராயரின் குரு.
சொரூபானந்தருக்குந் தத்துவராயர் தாய்மாமன் மகன்.
சொரூபானந்தர் சேந்தமங்கலத்திலும், தத்துவராயர் வீரைமாநகரிலும் பிறந்து வாழ்ந்தனர்.
திருவலஞ்சுழியில் வாழ்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. [1]
கதை
- இருவரும் குருவைத் தேடிச் சென்றனர். தத்துவராயர் வடக்கு நோக்கிச் சென்றார். சொரூபானந்தர் செற்கு நோக்கிச் சென்றார்.
- திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரில் நாணற்புல் புதரில் அமர்ந்து சிவப்பிரகாசர் தவம் செய்துகொண்டிருந்தார். இவர் புதரிலிருந்து வெளியில் வரும்போது சொரூபானந்தர் கண்டு வணங்கிக் குருவாகப் பெற்றார். குரு கிடைக்காமல் திரும்பிய தத்துவப்பிரகாசர் திரும்பிவந்து சொரூபானந்தரைக் கண்டு குருவாக ஆக்கிக்கொண்டார்.
- சொரூபானந்தர் தத்துவராயரை மதிக்கவில்லை. எனவே அவரது மதிப்பைப் பெறத் தத்துவராயர் குருவைப் போற்றி 18 நூல்கள் எழுதினார். இவற்றை அடங்கல்முறை எனக் குறிப்பிடுகிறோம். இவற்றை இவரது ஆசிரியர் கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழ் தெரிந்தவன் பாடிய பாட்டு) என்றும், உலகியலுக்கு உதவாதவை என்றும் கருதினார்.
- இப்படி ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறமுடியாத தத்துவராயர் கடலில் விழுந்து உயிர் துறக்கச் சென்றார். செய்தி அறிந்த சொரூபானந்தர் “அந்தக் குருவுக்கு வீங்கியை இங்கே வரச்சொல்லுங்கள்” என்றார்.
- ஆசிரியரின் கட்டளையை ஏற்று தத்துவராயர் மீண்டார். “இந்த நூல்கள் உனக்குப் பயன்படும். உலகியலுக்குப் பயன்படா” என ஆசிரியர் விளக்கினார்.
- அன்று தனக்கு உணவு படைப்பதற்கு முன் தத்துவராயர் ‘மோகவதைப் பரணி’ என்னும் நூலின் நடுப்பாகமாகச் ‘சசிவர்ண போதம்’ என்னும் பகுதியைப் பாடிக் குருவுக்குப் படைத்தார். குரு அதனைப் பாராட்டினார்.
- பின்னர் பெருந்திரட்டு, குறுந்திரட்டு ஆகிய நூல்களும் தத்துவராயரால் தொகுக்கப்பட்டன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ தத்துவராயர் வேப்பத்துர் சோழியவகுப்புப் பிராமணர் என்பர்.