எஸ். பி. முத்துராமன்
Jump to navigation
Jump to search
சுப. முத்துராமன் | |
---|---|
பிறப்பு | முத்துராமன் ஏப்ரல் 7, 1935 காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு , இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் |
சுப. முத்துராமன் (பிறப்பு 7 ஏப்ரல் 1935) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.[1] தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜினிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர்.[2] ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கிருந்தது. இவர் இரு தென்மண்டல பிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
- கனிமுத்து பாப்பா (1973)
- பெத்த மனம் பித்து (1973)
- காசியாத்திரை (1973)
- தெய்வக் குழந்தைகள் (1973)
- அன்புத் தங்கை (1974)
- எங்கம்மா சபதம் (1974)
- ஆண்பிள்ளை சிங்கம் (1975)
- வாழ்ந்து காட்டுகிறேன் (1975)
- யாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)
- மயங்குகிறாள் ஒரு மாது (1975)
- மோகம் முப்பது வருசம் (1976)
- ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)
- புவனா ஒரு கேள்விக்குறி (1977)
- ஆளுக்கொரு ஆசை (1977)
- ஆடு புலி ஆட்டம் (1977)
- வட்டத்துக்குள் சதுரம் (1978)
- சக்கைப்போடு போடு ராஜா (1978)
- காற்றினிலே வரும் கீதம் (1978)
- பிரியா (1979)
- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- கவரிமான் (1979)
- வெற்றிக்கு ஒருவன் (1979)
1980களில்
- ருசி கண்ட பூனை (1980)
- ரிஷிமூலம் (1980)
- முரட்டுக் காளை (1980)
- குடும்பம் ஒரு கதம்பம் (1981)
- கழுகு (1981)
- ராணுவ வீரன் (1981)
- நெற்றிக்கண் (1981)
- போக்கிரி ராஜா (1982)
- சகலகலா வல்லவன் (1982)
- புதுக்கவிதை (1982)
- எங்கேயோ கேட்ட குரல் (1982)
- தூங்காதே தம்பி தூங்காதே (1983)
- பாயும் புலி (1983)
- அடுத்த வாரிசு (1983)
- நான் மகான் அல்ல (1984)
- நல்லவனுக்கு நல்லவன் (1984)
- எனக்குள் ஒருவன் (1984)
- ஸ்ரீ ராகவேந்திரா (1985)
- உயர்ந்த உள்ளம் (1985)
- நல்ல தம்பி (1985)
- ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
- என் செல்வமே (1986)
- தர்ம தேவதை (1986)
- மிஸ்டர் பாரத் (1986)
- வேலைக்காரன் (1987)
- மனிதன் (1987)
- சம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)
- பேர் சொல்லும் பிள்ளை (1987)
- குரு சிஷ்யன் (1988)
- தர்மத்தின் தலைவன் (1988)
- நல்லவன் (1988)
- ராஜா சின்ன ரோஜா (1989)
1990களில்
- உலகம் பிறந்தது எனக்காக (1990)
- அதிசயப் பிறவி (1990)
- தியாகு (1991)
- தையல்காரன் (1991)
- காவல் கீதம் (1992)
- பாண்டியன் (1992)
- தொட்டில் குழந்தை (1995)
மேற்கோள்கள்
- ↑ "Rajinikanth deserves all the love he gets: SP Muthuraman" (in en). 2018-12-12. https://indianexpress.com/article/entertainment/tamil/rajinikanth-sp-muthuraman-movies-5489380/.
- ↑ Kosalairaman, Muthu Vinayagam, "சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்! ப்யூர் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன்", Tamil Hindustan Times, retrieved 2024-05-13
வெளியிணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எஸ். பி. முத்துராமன்
- SP. Muthuraman's team பரணிடப்பட்டது 2012-01-04 at the வந்தவழி இயந்திரம் at PixMonk.com