தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தேஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புல்லக்கடம்பன் ஊராட்சியில் அமைந்த தீர்த்தாண்டதானம் எனும் கடற்கரை கிராமத்தில் உள்ள சிவன் கோயில் ஆகும்.

சிறப்பு நாட்கள்

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இக்கோயிலின் சகல தீர்த்தக் குளத்தில் நீராட பாவங்கள் நீங்கும் என்பது இந்து சமயத்தவர்களின் தொன்ம நம்பிக்கை ஆகும். [1]

இக்கோயிலில் தினம் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளது.

  • மூலவர்: சகல தீர்த்தேஸ்வரர்
    தீர்த்தமுடையவர்
  • இறைவி:பெரியநாயகி
  • தீர்த்தம்: சகல தீர்த்தம் - நோய் நீக்கும். பாவம் போக்கும். ஆயுள் விருத்தி அளிக்கும்.
  • விருட்சம் – பாதிரி மரம்
  • திருத்தலச் சிறப்பு – பிதுர் தர்ப்பணம்
  • மேற்கு நோக்கிய சிவலிங்கம், கிழக்கு நோக்கிய அம்மன்.

அமைவிடம்

இது தொண்டிக்கு வடக்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ளது. இக்கோயிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் உள்ளது.

தல வரலாறு

இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது இவ்விடத்தில் சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். அந்த நீரைப் பருகிய ராமபிரான் மனம் மகிழ்ந்தார். அப்போது அங்கு வந்த அகத்தியர், இராவணனை வெல்ல, இங்குள்ள சிவபெருமானை வணங்கிச் செல் என்றார். அவ்வாறே இராமரும் செய்தார்.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்