மங்கொம்பு - 18

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மங்கொம்பு - 18
MO 18 - Karishma
வேளாண் பெயர்
கரிஷ்மா (Karishma)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 6 X மங்கொம்பு - 1
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
வெளியீடு
1998[1]
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

மங்கொம்பு - 18 (MO 18 - Karishma) முன்மொழிவு எண்: (IET - 15095) [2]எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[3] மங்கொம்பு - 6 மற்றும் மங்கொம்பு - 1 ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[1] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகை,[4] கரிஷ்மா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

பின்னணி

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[5] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறனும், மற்றும் பித்தப்பை பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. மேலும் கேரளாவின் மூன்று பருவங்களுக்கும், குறிப்பாக குட்டநாடின் காரி நிலங்களுக்கு உகந்த குள்ளப் பயிர் வகையாகும்.[6]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "Varieties Released - MO18-Karishma 1998". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-09-05.
  2. Indian Rice Varietal Information Name of Variety Karishma (MO-18) (IET-15095)
  3. Paddy varieties of Kerala - Karishma (MO 18)
  4. MONCOMPU Rice Research Station, Kerala Agricultural University Kerala Varieties released/ identified MO 18
  5. Kerala Agricultural University (KAU) Medium Duration - Karishma (MO-18)
  6. Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer) - Karishma (MO 18)
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_18&oldid=456445" இலிருந்து மீள்விக்கப்பட்டது