பாலா சிங்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாலா சிங்
Bala Singh Indian actor.jpg
பிறப்பு(1952-05-07)7 மே 1952
இறப்பு27 நவம்பர் 2019(2019-11-27) (அகவை 67) [1]
இருப்பிடம்வடபழனி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1972–2019
சொந்த ஊர்மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
வாழ்க்கைத்
துணை
தங்கலீலா
பிள்ளைகள்ஓசின்
சிபின்

பாலா சிங் (Bala Singh, 07 மே 1952 - 27 நவம்பர் 2019)[2] என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நாசர் நடித்த அவதாரம் என்னும் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.[3]

குடும்பம்

இவருக்கு தங்கலீலா என்ற மனைவியும், ஓசின் என்ற மகளும், சிபின் என்ற மகனும் உள்ளனர்.

திரை வாழ்க்கை

பாலா சிங் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நாசரின் அவதாரம் (1995) படத்தில் நடிப்பதற்கு முன்பு, தேசிய நாடக பள்ளியில், பயிற்சி பெற்றார். இவர் சங்கர், மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.[4]

2009 ஆம் ஆண்டில், வண்ணத்துப்பூச்சி என்னும் படத்தில், ஒரு தாத்தாவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது தாத்தா, பாட்டி மற்றும் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இடையிலான உறவை ஆராய்ந்த ஒரு திரைப்படமாகும்.

இறப்பு

இவருக்கு 26 நவம்பர், 2019 அன்று மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி 27 நவம்பர், 2019 அன்று உயிரிழந்தார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1983 மலமுகலிலே தெய்வம் மலையாள திரைப்படம்
1985 உயரம் நஞ்சன் நடகே மலையாள திரைப்படம்
1987 ஜங்கிள் பாய் மலையாள திரைப்படம்
1989 தடவராயிலே ராஜக்கன்மார் இராமசாமி மலையாள திரைப்படம்
1991 வேண்டும் ஒரு ஆத்யராத்திரி இராஜன் மலையாள திரைப்படம்
1995 அவதாரம் பாசி
1996 இந்தியன்
1997 ராசி கதிர்வேல்
1997 உல்லாசம் தாமோதரன்
1998 மறுமலர்ச்சி காளிங்கராயன்
1998 புதுமைப்பித்தன்
1998 தினம்தோறும்
1998 சிம்மராசி
1999 கெஸ்ட் அவுஸ்
1999 இரணியன்
1999 ஆனந்த பூங்காற்றே
1999 காமா வெங்கடகிரி
2000 சந்தித்த வேளை
2000 சுதந்திரம்
2000 பாரதி
2001 தீனா மலர்வண்ணன்
2001 மாயன்
2002 தயா அமைச்சர்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் தேவநாதன்
2002 காமராசு
2002 இவன்
2002 சுந்தரா டிராவல்ஸ்
2002 நண்பா நண்பா எட்வர்ட்ஸ்
2003 சாமி
2003 ஒருத்தி
2003 நள தமயந்தி செட்டியார்
2004 விருமாண்டி ராசுகாளை
2004 கேரள அவுஜ் உடன் வில்பானக்கு சின்ன தேவர் மலையாள திரைப்படம்
2004 உதயா ராம்ஜி
2004 ஜோர்
2004 மதுர
2004 ட்ரீம்ஸ்
2005 மண்ணின் மைந்தன் ஜோசப்
2005 கண்ணம்மா
2006 இலக்கணம்
2006 திருப்பதி
2006 நாளை கோதண்டம்
2006 புதுப்பேட்டை அன்பு
2006 ரெண்டு இரத்தினசாமி
2007 முனி
2007 கிரீடம் மாசிலாமணி
2007 நான் அவனில்லை அமைச்சர்
2008 பீமா
2008 தங்கம்
2008 அய்யாவழி
2008 முல்ல மலையாள திரைப்படம்
2008 பிரிவோம் சந்திப்போம் முத்தையா
2008 உளியின் ஒசை பிரம்மராயர்
2009 ஆனந்த தாண்டவம்
2009 கந்தகோட்டை
2009 மலையன்
2009 ஜகன்மோகினி
2009 வண்ணத்துப்பூச்சி
2009 வேட்டைக்காரன் இராஜசேகர்
2009 தலை எழுத்து பச்சை
2010 மதராசபட்டினம் துரைசாமி
2010 விருந்தாளி ரங்கராஜன்
2010 தம்பி அர்ஜூனா காக்கா
2011 மார்கண்டேயன் எசக்கி
2011 இளைஞன்
2011 ஒஸ்தி
2011 கீழ தெரு கிட்சா
2011 வர்மம்
2011 மின்சாரம்
2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம் பரமசிவம்
2012 அம்புலி
2012 இதயம் திரையரங்கம்
2012 கிருஷ்ணவேனி பாஞ்சாலி
2012 மாசி
2012 இத்தனை நாளா எங்கிருந்தாய் வெளியாகவில்லை
2012 பொற்கொடி 10ஆம் வகுப்பு
2013 சென்னையில் ஒரு நாள்
2013 ஜன்னல் ஓரம்
2013 வத்திக்குச்சி
2013 நீளம் வெளியாகவில்லை
2013 யமுனா
2013 குண்டெல்லோ கோடாரி தெலுங்கு திரைப்படம்
2013 மறந்தேன் மன்னித்தேன்
2014 தெனாலிராமன் நாகநாதன்
2014 அங்குசம்
2014 விஞ்ஞானி
2014 ஜிகர்தண்டா சந்தானம்
2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா பிரியாவின் தந்தை
2014 விழி மூடி யோசித்தால் பாய்
2015 49-ஓ தீனதயாளன்
2015 பூலோகம்
2016 சும்மாவே ஆடுவோம்
2016 விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
2016 பலே வெள்ளையத்தேவா
2017 எங்கிட்ட மோதாதே
2017 அட்டு
2017 குரங்கு பொம்மை விஜியின் தந்தை
2017 வல்லதேசம்
2018 தானா சேர்ந்த கூட்டம் குணசேகரன்
2018 கடிகார மனிதர்கள் வீட்டு உரிமையாளர்
2018 சாமி 2 (திரைப்படம்) ஆத்தங்கரை சண்முகம்
2019 சர்வம் தாளமயம் கோகுல் ராஜ்
2019 நீர்த்திரை
2019 குடிமகன்
2019 என். ஜி. கே அருணகிரி
2019 மகாமுனி அரசியல்வாதி

தொலைக்காட்சி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பாலா_சிங்&oldid=21934" இருந்து மீள்விக்கப்பட்டது